ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஹிந்து முதலமைச்சர் ஒருவர் பதவியேற்கும் விதத்தில் தெளிவான பாதை ஒன்றை வகுக்கிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா. அவரது திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அலறுகிறார் பரூக் அப்துல்லா!
ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநர் சத்ய பால் மாலிக்குடன் செவ்வாய்க்கிழமை இன்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது, மாநில விவகாரங்கள் குறித்து அசலப் பட்டது.
இந்தக் கூட்டத்தில் அமித் ஷா ஒரு புதிய திட்டத்தை முன்வைத்துள்ளதாகக் கூறப் படுகிறது. அதன்படி, காஷ்மீர் மறு சீரமைப்பு, குறிப்பாக ஜம்மு, மற்றும் காஷ்மீர் பகுதி வரையறை குறித்து விரிவாக பேசப் பட்டுள்ளது. அப்போது டிலிமிடேஷன் – என்ற வரையறை திட்டத்தை அமித் ஷா முன்வைத்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் 16% இஸ்லாமியர்கள், 100% மாநிலத்தை ஆளும் நிலை மாறி, 84% ஹிந்து – பௌத்த – சீக்கியர்கள் ஆளும் நிலைக்கு அமித் ஷா வித்திடுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பகுதிகளின் நிலப்பரப்பு விகிதம் காஷ்மீர் (16%) ஜம்மு (26%) லடாக் (58%) என மூன்று பிரதேசங்களாகக் கிடக்கிறது. இருப்பினும், இன்று வரை அந்த மாநிலத்தை ஆட்சி செய்து வருபவர்கள் இஸ்லாமியரே. .
அதற்கு காரணம், 1939இல் உருவாக்கப்பட்ட இந்த சட்ட மன்றத்தில், ஷேக் அப்துல்லா தொகுதிகளைப் பிரித்த விதம்தான்!
16% உள்ள காஷ்மீருக்கு 43 தொகுதிகளும், 26% உள்ள ஜம்முவுக்கு 30 தொகுதிகளும், 58% உள்ள லடாக்குக்கு 2 தொகுதிகளும் என பிரித்து வைத்தார்.
தற்போது அவை… 16% உள்ள காஷ்மீருக்கு 46 தொகுதிகள். (+3) 26% உள்ள ஜம்முவுக்கு 37 மட்டுமே. (+7) 58% உள்ள லடாக்குக்கு 4 தொகுதிகள் (+2) என உள்ளன.
இதனை சரிசெய்யும் விதமாக, நிலப்பரப்பு மற்றும் மக்கள்தொகையை கணக்கில் கொண்டு தொகுதிகளை சரிவர வரையறுக்க இன்று ஜம்மு காஷ்மிர் ஆளுநருடன் ஆலோசனை நடத்தினார் அமித் ஷா.
இப்படி வரையறுக்கப்பட்டால், இதுவரை 16% இஸ்லாமியர்கள் ஆளும் மாநிலம், மீதமிருக்கும் 84% பெரும்பான்மை ஹிந்து – பௌத்த – சீக்கியர்களால் ஆளும் நிலை உருவாகும். மேலும், 1991 இல் எஸ்டி ஒதுக்கீடு கொடுக்கப் பட்ட குஜ்ஜார்கள், பகேர்வல்ஸ், சிப்பிஸ் உள்ளிட்ட சமூகத்தவருக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கும்.
இந்நிலையில் பிடிபி கட்சியின் தலைவர்களில் ஒருவரான வஹீத் உர் ரஹ்மான் பரா இது குறித்துக் கூறிய போது, ஜம்முவுக்கு எதிராக காஷ்மீரை முன்னிறுத்தப் பார்க்கிறது பாஜக.,! ஜம்மு மக்களுக்கு எதிராக எங்களுக்கு எந்த விரோதமும் கிடையாது. முக்கியமான பிரச்னைகள் குறித்து யோசிக்க வேண்டும் அதுதான் பிரச்னை! குறிப்பாக மக்களின் மனங்களை வெல்வதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்று கூறியுள்ளார்
இதனிடையே, இந்த டிலிமிடேஷன் திட்டத்துக்கு தனது எதிர்ப்பை தெரிவித்துள்ள முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, அமித் ஷாவால் தேர்தல்கள் நடத்தப் படுவதில்லை, மக்களால் அவை நடத்தப் படுகின்றன! அமித் ஷா என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறாரோ அதை செய்யட்டும்” என்று கூறியுள்ளார்.
அமித் ஷாவின் திட்டப்படி, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், அங்குள்ள ஒவ்வொரு சமூகத்தினருக்குமுரிய ஒதுக்கீட்டின் படி பிரதிநிதித்துவம் கிடைக்குமானால், வருங்காலங்களில் 370, 35ஏ பிரிவுகள் எல்லாம் ஜம்மு காஷ்மிர் சட்டமன்றத்தினாலேயே தூக்கப்பட்டு விடும் நிலை வரலாம் என்கிறார்கள்!



