ரமலான் பண்டிகை கொண்டாட பிறை தெரிந்தது: தலைமை காஜி அறிவிப்பு!

Published:

silhouette two men praying sunset concept religion islam background mosque 61683110 - 2026

ரமலான் பண்டிகை கொண்டாடுவதற்கான பிறை தெரிந்தது என்று தலைமை காஜி அறிவித்தார். இதை அடுத்து நாளை பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட ஆயத்தமாகி வருகின்றனர்.

ரமலான் பண்டிகை ஆண்டுதோறும் ரமலான் மாதத்தில் கொண்டாடப் படுவது வழக்கம். ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் நோன்பு மேற்கொள்வார்கள். நோன்பு முடியும் ரமலான் மாத இறுதி நாளில் பிறை தெரியும். பிறை தென்பட்ட மறுநாள் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும்.

தற்போது ரமலான் மாத நோன்பு இன்றுடன் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், நாளை ரம்ஜான் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளன. பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகைக்கும் ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன.

இந்நிலையில், தமிழகத்தில் இன்று பிறை தெரிந்ததால் நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என தமிழக தலைமை காஜி முறைப்படி அறிவித்துள்ளார்.

Related articles

Recent articles

spot_img