பச்.. பச்..சென்று ஜெகனுக்கு முத்தம் கொடுத்து மகிழ்ந்த சாரதா பீட சுவாமிகள்! குரு காணிக்கை குவித்த ஜெகன்!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

ap cm meets swami swaroopanandendra saraswati - 2026தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு… சாரதா பீடத்தில் ஜெகன்மோகன் ரெட்டி இன்று வருகை தந்தார். அவருக்கு அன்பும் ஆதரவும் காட்டி முத்தமிட்டார் சொரூபானந்தேந்திர சுவாமிகள்…!

முதன்முறையாக 2017 ல் ஜெகன் தன் பாதை யாத்திரையைத் தொடங்கும் முன்பு சாரதா பீடத்திற்குச் சென்று சொரூபானந்தரின் ஆசிகளை பெற்றார்.  தற்போது முதலமைச்சராக மீண்டும் ஒருமுறை பீடத்தை தரிசிக்க வந்தார் ஜெகன்.

ஆந்திரப் பிரதேச முதல்வராகப் பொறுப்பேற்ற பின் முதன்முறையாக விசாகப்பட்டினம் வந்த ஜெகன்மோகன் ரெட்டிக்கு விமான நிலையத்தில் பெரும் வரவேற்பு அளிக்கப் பட்டது.jagan swani - 2026

வட ஆந்திராவின் எம்எல்ஏக்கள் எம்பிக்கள் ஒய்சிபி தலைவர்கள் ஜெகனை வரவேற்க வந்திருந்தார்கள். விமான நிலையத்திலிருந்து ஜெகன் பிரத்தியேக கான்வாயில் “பெந்துருத்தி” அருகில் உள்ள “சின முஷிடி வாடா”வில் உள்ள சாரதா பீடத்திற்குச் சென்றார்.

அங்கே முதல்வர் ஜெகனுக்கு சாரதா பீடத்தில் இருந்த வேத பண்டிதர்கள் பூரண கும்ப வரவேற்பு அளித்தார்கள். சம்பிரதாய உடையில் சென்ற ஜெகன் சுவாமியின் ஆசிகளைப் பெற்றார்.

சுவாமிகளுக்கு காணிக்கை சமர்ப்பித்து பாத நமஸ்காரம் செய்தார் ஜெகன். அச்சமயத்தில் ஜகனை ஸ்வரூபானந்த சுவாமி அணைத்துக்கொண்டு அன்போடு முத்தமிட்டார்.

jagan swarupananda - 2026பின்னர் ஜகன் ராஜசியாமளா தேவி பூஜை செய்தார். காபினட் அமைச்சர்களின் பெயர்கள் விஷயமாக சுவாமியோடு முதல்வர் ஜெகன் சிறிது நேரம் பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தெரிகிறது.

விசாகப்பட்டினத்தில் இருந்து மீண்டும் ‘கன்னவரம் ‘விமான நிலையத்திற்குச் சென்று பின் அங்கிருந்து தாடேபல்லியில் உள்ள தன் வீட்டிற்குச் சென்றார் ஜெகன்.

முதலமைச்சரின் பயணத்தின் பின்னணியில் விசாகப்பட்டினம் ஏர்போர்ட்டில் இருந்து “சினமுஷிடிவாடா” சாரதாபீடம் வரை போலீசார் அதிக அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தார்கள். ஜெகன் ஆதரவாளர்கள் வழி நெடுகிலும் வரவேற்பு பதாகைகளை ப்ளக்ஸ் பேனர்களை வைத்திருந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.