புகார் மீது போலீஸார் உடனடி நடவடிக்கை எடுத்திருந்தால்… என் மகள் பிழைத்திருப்பாள்!

Published:

priyankareddy family - 2026

எங்கள் புகார் மீது போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்திருந்தால் எங்கள் மகள் பிழைத்திருப்பாள் – பிரியங்கா ரெட்டியின் பெற்றோர்.

இரு தெலுங்கு மாநிலங்களில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய பிரியங்கா ரெட்டி கொலை வழக்கில் போலீசார் 24 மணி நேரத்தில் முன்னேற்றம் கண்டார்கள். ஆனால் புகார் செய்த உடனே அலட்சியப் படுத்தாமல் நடவடிக்கை எடுத்திருந்தால் தம் மகள் உயிரோடு கிடைத்திருப்பாள் என்று பிரியங்கா ரெட்டியின் தந்தை ஸ்ரீதர் ரெட்டி தெரிவித்தார்.

இரவு 9 மணியிலிருந்து பிரியங்கா ரெட்டி போன் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது என்றும் அதனால் இரவு 11 மணி வரை பார்த்து விட்டு அவள் வராததால் போலீசுக்கு புகார் அளித்ததாகவும் அப்போது போலீசார் கண்டு கொள்ளவில்லை என்றும் உடனே செயல்பட்டிருந்தால் இந்த கொடூரம் நடந்து இருக்காது என்றும் அவர் தெரிவித்தார்.

போலிஸார் நடவடிக்கை மீது பிரியங்காவின் தந்தை ஆத்திரமடைந்தார். இப்போது 10 குழுக்களை அனுப்பி என்ன செய்து என்ன லாபம் என்று கேட்டார். உயிர் போனபின் எத்தனை குழுக்களை அனுப்பினால் என்ன? யாரைக் கைது செய்தால்தான் என்ன? என்று தன் ஆவேசத்தை வெளிப்படுத்தினர் பிரியங்காவின் பெற்றோர்.

பிரியங்காவின் மரணத்திற்குப்பின் ஓடி ஓடி வேலை செய்யும் போலீசாரை குறித்து ஸ்ரீதர் ரெடி இப்போது என்ன செய்து என்ன லாபம் என்று வருந்தி கண்ணீர் வடித்தார்.

ALSO READ:  நடத்தையில் சந்தேகம்... நடந்த சண்டை... மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!
priyankareddyfamily - 2026

அவர்கள் உடனே எங்கள் முறையீட்டை ஏற்று இருந்தால் தன் மகள் உயிரிழந்திருக்க மாட்டாள் என்று வருந்தினார். இரவு 11 மணிக்கு புகார் அளித்தால்… காலையில் தன் மகள் மரணமடைந்த செய்தியை தெரிவித்தனர் என்றார்.

ரங்காரெட்டி ஜில்லா ஷாத் நகர் மண்டலம் சடான்பல்லி கிராமப்புற நகரில் சாலை பிரிட்ஜின் கீழே முழுவதும் எரிந்த நிலையில் பிரியங்கா ரெட்டி உடலை அடையாளம் கண்டதாக போலீசார் தகவல் தெரிவித்தனர் என்று கூறினார்.

பிரியங்காவின் தந்தை ஸ்ரீதர் இரவு ஒன்பதரை மணிக்கு பிரியங்கா வீட்டுக்கு வரவில்லை என்று தனக்கு போன் வந்ததாகச் சொன்னார். பதினோரு மணிக்கு போலீசுக்கு புகார் அளித்தேன். சிசி கேமராவை போலீசார் பரிசீலித்தார்கள். பிரியங்கா சென்றபோது உள்ள விஷுவல்ஸ் இருந்தன. திரும்பி வரும்போது உள்ள விஷுவல்ஸ் இல்லை என்றனர். அவ்வளவு தானே தவிர பிரியங்கா ரெட்டி என்ன ஆனார் என்பது பற்றி போலீசார் சீரியசாக எடுத்துக்கொள்ளவில்லை என்று வருந்தினார்.

சிசி கேமராக்களை பார்த்துக்கொண்டே பொழுது போக்கி னார்கள். கால விரயம் செய்தார்கள். அதனால் தான் என் மகள் உயிர் போனது என்றார். ஒரு ஸ்டேஷனுக்கு புகார் கொடுக்கச் சென்றபோது வேறு ஒரு ஸ்டேஷனுக்கு போய் புகார் கொடுங்கள் என்று விரட்டினார்கள் என்று வருத்தப்பட்டார்.

ALSO READ:  விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

தன் மகள் கூட கொஞ்சம் அந்த நேரத்தில் எச்சரிக்கையாக இருந்திருக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தார் ஸ்ரீதர் ரெடி.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img