
மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர்,தனது காதலிக்காக
உண்ணாவிரதம் போராட்டம் நடத்தி ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளார்.
மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஆனந்த பர்மன் லிப்பிக்கா என்ற பெண்னை காதலித்து வந்துள்ளார். திடீரென பர்மனுடன் இருந்த அனைத்து தொடர்புகளையும் லிப்பிக்கா துண்டித்து கொண்டார்.
இதனிடையே தனது காதலி லிப்பிக்காவிற்கு திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருவதை அறிந்த அவர் தனது காதலியின் வீட்டிற்கு முன்பாக உண்ணாவிர போராட்டத்தில் ஈடுபட்டார்.
”என்னுடைய காதலை திரும்ப கொடு,என்னுடைய 8 வருடத்தை திரும்ப கொடு” போன்ற பதாகைகளுடன் லிப்பிக்காவின் வீட்டிற்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட, பலரும் பர்மனின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார்கள்.
இதனிடையே சம்பவம் குறித்து அறிந்த காவல்துறையினர்,பர்மனுடையே போராட்டத்தை கைவிடுமாறு அவரிடம் வலியுறுத்தினர்.
இதற்கிடையே லிப்பிக்காவை திருமணம் செய்ய இருந்த மணமகனின் குடும்பத்தாரும் லிப்பிக்காவின் வீட்டிற்கு வந்தனர்.
இதையடுத்து லிப்பிக்காவின் ஊரை சேர்ந்த பிரமுகர்கள் அவரின் குடும்பத்தினருடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்கள்.
இதையடுத்து லிப்பிக்கா தனது காதலன் ஆனந்த பர்மனை திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்தார்.
மேலும் லிப்பிக்காவின் குடும்பத்தினரும் இந்த திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்.
இதனைதொடா்ந்து ஆனந்தபரமன் தனது உண்ணாவிரத போராட்டதை கைவிட்டு மகிழ்ச்சியுடன் திருமண ஏற்பாடுகளை கவனிக்க தொடங்கி உள்ளார்.
வழக்கமாக காதலன் வீட்டு முன் காதலிதான் உண்ணாவிரதம் மற்றும் போராட்டங்களில் ஈடுபடுவது வழக்கம் ஆனால் காதலன் போராட்டம் செய்து காதலியை கரம்பிடித்த சம்பவம் அப்பகுதியில் ஒரு புது விதமான நிகழ்வாக இருந்தது.



