
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே திடீரென திறக்கப்பட்ட டாஸ்மாக கடைக்கு பொதுமக்கள் எதிர்த்து போராட்டம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அடுத்தள்ள கூட்டமாவு ஆள்குளம் பகுதியில் டாஸ்மாக் கடை ஓன்று நேற்று மதியம் 12 மணிக்கு திடீரென திறக்கப்பட்டது.
இது குறித்த தகவல் அப்பகுதி முழுவதும் காட்டுத்தீயாக வேகமாக பரவியது. இதையடுத்து, சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த ஆண்கள், பெண்கள் உள்ளட்ட ஏராளமானோர் டாஸ்மாக் கடைக்கு முன் ஓன்று திரண்டனர். பின்னர், அவர்கள் கடை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தக்கலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்த சப்-இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்கள் பகுதியில் கிறிஸ்தவ ஆலயம், கோவில்கள் உள்ளன. மதுக்கடையால் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும். எனவே, கடையை அகற்ற வேண்டும் என்று கூறினர்.
அப்போது, சப்-இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ், இது சம்பந்தமாக மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கும் படி கூறினார். அதைத்தொடர்ந்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.



