செல்ஃபி எடுக்க முயன்ற தொண்டரின் கையைத் தட்டிவிட்ட முதலமைச்சர்!

Published:

manohar lal kattar - 2026

தன்னையும் வைத்து செல்ஃபி எடுக்க முயன்ற தொண்டரின் செல்போனை தட்டிவிட்டார் ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார். அது இப்போது சமூகத் தளங்களில் வைரலாகியுள்ளது.

ஹரியானா மாநிலம், கர்னல் பகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார் மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார்! அப்போது, கூட்டத்தினரைப் பார்த்து ரோஜா பூக்களைத் தூவியபடி நடந்து வந்து கொண்டிருந்தார்.

அந்த நேரம் திடீரென ஒரு தொண்டர் ஆர்வக் கோளாறில், முதல்வருடன் இருப்பது போல் செல்ஃபி எடுக்க ஆங்கிள் பார்த்துள்ளார். தாம் வரும் வழியில் இளைஞர் மறைத்துக் கொண்டு நின்று, செல்ஃபி எடுப்பதைப் பார்த்து கோபப் பட்ட முதல்வர் கட்டார், சடாரென அந்த தொண்டரின் கையைத் தட்டி விட்டார்.

பின்னர் அந்த இளைஞரின் கையைப் பிடித்து ஓரமாக நிற்க வைத்துவிட்டு, அங்கிருந்து நகர்ந்தார். மீண்டும் பூக்களை எடுத்து கூட்டத்தினரைப் பார்த்து தூவியபடி சென்றார் கட்டார். .

இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதை அங்கிருந்த சிலர் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

ALSO READ:  புதிய விடியலுக்கு அச்சாரம்!

Related articles

Recent articles

spot_img