child 1 - 2026

பாஞ்சாப்பில் ஆழ்துளை கிணற்றில் சிக்கிய குழந்தை 109 மணிநேரத்துக்கு பின் உயிருடன் மீட்கப்பட்டான்.

பஞ்சாப் சங்க்ரூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் கடந்த வியாக்கிழமை 2 வயது குழந்தை தன் வீட்டின் முன் விளையாடிக்கொண்டு இருந்தான்.

அப்போது வீட்டின் அருகே ஆழ்துளை கிணறு தோண்டப்பட்டு பாதுகாப்பு இன்றி சாக்கு ஒன்ற கொண்டு மூடப்பட்டிருந்தது.

இதனையடுத்து அந்த குழந்தை சாக்கின் மீது ஏறி விளையாடியது அப்போது திடீரென குழந்தையின் பாரம் தாங்காமல் சாக்கு நழுவி குழந்தை ஆழ்துளை கிணற்று குழிக்குள் கொஞ்சம், கொஞ்சமாக இறங்க துவங்கியது.

இதனையடுத்து தனது குழந்தையை காணமால் அங்கு வந்த குழந்தையின் தாயார் அக்கம், பக்கம் தேடி வந்த நிலையில் ஆழ்துளை கிணற்று பகுதியில் வந்து பார்த்தபோது குழந்தை ஆழ்துளை கிணற்றில் உள்ளே விழுந்ததை பார்த்து பதறிபோய் குழந்தையை மீட்க போராடினார்.

ஆனால் குழந்தை தாயால் மீட்க முடியாத அளவுக்கு ஆழ்துளை கிணற்றுக்கு ஆழத்திற்கு சென்றுவிட்டான்.

ALSO READ:  தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

இது குறித்த தகவல் அளிக்கப்பட்ட நிலையில் மீட்புப்படையினரும், காவல்துறையினரும், சம்பவ இடத்திற்கு வந்து குழந்தையை மீட்கும் நடவடிக்கையில் இறங்கினா்.

ஆனால் ஆழ்துளை கிணறு 150 அடி ஆழம் என்பதால் குழந்தையை மீட்கும் பணி சவாலாக இருப்பதை அதிகாரிகள் தெரிவித்தனா்.

கிட்டதட்ட 4 நாட்களுக்கு மேலான மீட்புப்படை அதிகாரிகளும், ராணுவத்தினரும் குழந்தையை மீட்க போராடினர்.

ஆழ்துளை கிணற்றுக்கு அருகிலேயே பள்ளம் தோண்டப்பட்டு அதன் மூலம் குழந்தையை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கிடையே ஆழ்துளை கிணற்றுக்குள் தொடா்ந்து ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வந்தது.

கிட்டதட்ட 4 நாட்கள் போராட்டத்திற்கு பின் ஆழ்துளை கிணற்றில் சிக்கிய குழந்தை உயிருடன் மீட்கப்பட்டான்.

உடனடியாக அவன் ஆம்பலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படடான். குழந்தைக்காக பலரும் பிரார்தனை செய்து வந்த நிலையில் குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது. மகிழ்ச்சி அளிப்பதாகவும், மீட்புப்படை, இராணுவத்தினா்க்கு நன்றி தெரிவிப்பதாகவும் பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனா்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending