தில்லி மெட்ரோ.. திவால் ஆகிடும் – மோடிக்கு கடிதம் எழுதிய மெட்ரோமேன் ஸ்ரீதரனுக்கு ஆம்ஆத்மி பதில்!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

sridharan kejriwal - 2026

‘தில்லி மெட்ரோவில் பெண்கள், இலவச பயணம் செய்யும் திட்டம் சரியானது அல்ல; இதனால் தில்லி மெட்ரோ திவாலாகிவிடும். எனவே இதற்கு பிரதமர் ஒப்புதல் அளிக்கக் கூடாது” என்று மெட்ரோமேன் என்று அழைக்கப்படும் ஸ்ரீதரன் கடிதம் எழுதியுள்ளார்.

தில்லியில் இயக்கப்படும் அரசு பஸ்கள், மெட்ரோ ரயில்களில் பெண்கள் கட்டணம் செலுத்தாமல் இலவசமாக பயணம் செய்யும் திட்டம் விரைவில் அறிமுகப் படுத்தப்படும் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கடந்த 2-ஆம் தேதி அறிவித்தார்.

இந்தப் பயணத் திட்டம் குறித்து இந்திய பொறியியல் துறையில் ஓய்வு பெற்ற மூத்த அதிகாரியும் பல்வேறு மெட்ரோ ரயில் திட்டங்களின் ஆலோசகராக செயல்பட்டவருமான ஸ்ரீதரன் எதிர்ப்பு தெரிவித்துளார்.

அவர் இது குறித்து பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், தில்லி மெட்ரோவில் பெண்களை இலவசமாக பயணிக்க அனுமதி அளித்தால், DMRC திவாலாக நேரிடும்.

இலவச பயணத்தித்கு ஒரு போதும் மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது தில்லி மெட்ரோ என்பது, தில்லி மாநில அரசு மற்றும் இந்திய அரசு இரண்டின் ஒருங்கிணைந்த கூட்டு நிர்வாகம். இதில், ஒரு நிர்வாகம் தனிப்பட்ட வகையில் இவ்வாறு இலவசம் என்று கொள்கை முடிவு எடுத்து, தில்லி மெட்ரோவை திவால் ஆக்க வைக்க முடியாது…

தில்லி முதல்வர் அறிவித்துள்ள இலவச மெட்ரோ பயண திட்டம் சரியானது அல்ல. இத்திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தால் மெட்ரோ ரயில் திவாலாகிவிடும். இதற்கு பிரதமர் ஒப்புதல் அளிக்க கூடாது… என்று அந்தக் கடிதத்தில் வற்புறுத்தியுள்ளார் ஸ்ரீதரன்.

அவருக்கு பதிலளிக்கும் வகையில் ஆம் ஆத்மி கட்சியின் துணை முதல்வர் மனீஷ் சிஷோடியா எழுதியுள்ள கடிதத்தில், ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்த 4 ஆண்டுகளில் ஒருமுறை கூட தில்லி மெட்ரோ நிர்வாகத்தின் செயல்பாடுகளில் அரசு தலையிட்டதில்லை.

தில்லியில் பெண்கள் பாதுகாப்பை உறுதிபடுத்தவே இலவச பயணத்திட்டம், திட்டத்தை எதிர்க்காமல் எங்களை ஆசிர்வதித்திக்க வேண்டும்.
என கேட்டுக் கொண்டிருக்கிறார்.

letter to sridharan aap - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.