போலீஸுடன் மோதி, கட்சிக்கும் முதல்வருக்கும் கெட்ட பெயர் வாங்கிக் கொடுத்துட்டேனே..! முனிசிபல் சேர்மன் ராஜினாமா!

Published:

jagan - 2026

ஜெகனுக்கு கெட்ட பெயர் வாங்கி கொடுத்துவிட்டேன்…..! என் பதவியை ராஜினாமா செய்கிறேன்….! என்று திடீர் பரபரப்பைக் கிளப்பியுள்ளார் முனிசிபல் சேர்மன் ஒருவர்.

“போலீசாருடன் கடுமையாக நடந்து கொண்டு தவறு செய்துவிட்டேன். கட்சிக்கும் முதல்வருக்கும் கெட்ட பெயர் வாங்கிக் கொடுத்து விட்டேன். என் மீது நம்பிக்கையோடு முனிசிபல் சேர்மன் பதவியை ஒப்படைத்த எங்கள் எம்எல்ஏவுக்கு என்னால் கெட்ட பெயர். அதனால் மன்னிப்பு கேட்டு ராஜினாமா செய்கிறேன்” என்று பரபரப்பு செய்தி வெளியிட்டார் சின்னா….!

ஒய்.எஸ்.ஆர் கட்சித் தலைவர் ஒருவர் தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டுவிட்டார்.  தன் இயல்பை உணர்ந்ததால் கட்சித் தலைவருக்கு தன்னால் கெட்ட பெயர் வந்து விட்டதாக வருந்தி தன் சேர்மன் பதவியையும் ராஜினாமா செய்துவிட்டார்.

இது கிருஷ்ணா மாவட்டம், ஜக்கய்யபேட்டையில் நடந்த சம்பவம். ஜக்கய்யபேட்டை முனிசிபல் சேர்மன் ‘இன்டோர் இராஜகோபால்’ என்கிற ‘சின்னா ‘ மீது ஏற்கெனவே சில வழக்குகள் காவல் துறையில் பதிவாகி உள்ளன.  ரவுடிகள் குறித்த பட்டியலில் இடம் பெற்றிருப்பவர்களின் புகைப்படங்களை சேகரிக்கும் பணியில் இருந்த காவல் துறையினர், அது தொடர்பாக ரவுடிகளுக்கு போன் செய்து போட்டோக்களை சேகரித்து வருகிறார்கள்.

ALSO READ:  யுபிஐ கட்டணத்துக்கு வரியா? பரவும் வதந்தியும் அரசின் விளக்கமும்!

சின்னா மீது கூட வழக்கு பதிவாகி, ரவுடி ஷீட்டில் இருப்பதால் உள்ளூர் எஸ்பி ஞாயிறன்று சின்னாவுக்கு போன் செய்து, அவரது போட்டோவை அனுப்பும்படி கேட்டுள்ளார் .

உடனே முனிசிபல் சேர்மன் சின்னா தனது ஆதரவாளர்களோடு காவல்நிலையத்துக்குச் சென்றார். சட்டையை கழற்றி விட்டு அரை நிர்வாணமாக தர்ணாவில் அமர்ந்து விட்டார். சமாதானப்படுத்த முயன்ற கான்ஸ்டபிளின் வார்த்தையை அவர் கேட்கவில்லை .

சற்று நேரத்தில் சிஐ, எஸ்ஐ., மற்றும் இதர காவலர்கள் அங்கு வந்து சேர்ந்தனர். சின்னாவிடம் பேச முயன்றனர். அப்போது முனிசிபல் சேர்மன் சின்னா போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவர்களை கெட்ட வார்த்தைகளால் திட்டினார். எனவே போலீசார் சின்னா மீதும் அவருடைய ஆதரவாளர்கள் மீதும் மற்றுமொரு வழக்கைப் பதிவு செய்தனர்.

இந்த விவகாரம் ஜக்கய்யபேட்டையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பலரும் பேசக் கூடிய விஷயமாகவும் மாறிப் போனது.

முனிசிபல் சேர்மன் பதவியில் உள்ள தலைவர் இவ்வாறு நடந்து கொள்வது பற்றி கடுமையாக விமர்சிக்கப்பட்டது. தன் மேல் விமர்சனங்கள் வருவதை கவனித்த சின்னா சற்று தணிந்தார்.

ALSO READ:  ஒரு கைத்தறி தயாரிப்பையாவது வாங்கி, அதுகுறித்த வீடியோவை பகிருங்கள்!

செய்த தவறை உணர்ந்து திங்களன்று இரவு போலீசாரிடம் பகிரங்க மன்னிப்புக் கோரினார்.

ஜக்கய்யபேட்டை எம்எல்ஏ ‘சாமினேனி உதயபானு’ வுக்கு நடந்த மக்கள் விருது நிகழ்ச்சியில் பங்கேற்று தன் பச்சாதாபத்தை வெளியிட்ட சின்னா, பகிரங்க மன்னிப்பு கேட்டார். தன் முனிசிபல் சேர்மன் பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தை எம்எல்ஏ உதயபானவிடம் ஒப்படைத்தார்.

இருப்பினும் சின்னாவின் ராஜினாமாக் கடிதம் மீது கட்சி எந்தவித முடிவு எடுக்கப் போகிறது என்பதைத் தெரிந்து கொள்ள ஜக்கய்யபேட் மக்கள் அனைவரும் ஆவலாக உள்ளனர்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img