பாஜக.,வில் இணைந்த தெலுங்கு தேசம் கட்சி செய்தி தொடர்பாளர்!

இந்தியா சற்றுமுன்

telugudesam partymen bjp - 2026

தெலுங்கு தேசம் கட்சியின் செய்தி தொடர்பாளர் லங்கா, பாஜக.,வின் செயல் தலைவர் ஜே.பி.,நட்டா முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.

ஆந்திரப் பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில் தெலுங்கு தேசம் கட்சி பெரும் தோல்வியைச் சந்தித்தது. அதன் பின்னர், தெலுங்கு தேசம் கட்சியின் கூடாரம் கலகலத்து வருகிறது. இன்னும் 5 வருடங்கள் என்ன செய்யப் போகிறோம் என்ற கவலை பலருக்கும் வந்துவிட்டது.

இந்நிலையில், படுதோல்வியடைந்த தெலுங்கு தேசம் கட்சியின் எம்.பி.க்கள் சிலர், பாஜக.,வில் சேர்ந்தனர். தொடர்ந்து, தங்களை பாஜக., எம்.பிக்களாக அங்கீகரிக்கும்படி கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து மேலும் சிலர் பாஜக.,வில் இணையப் போவதாகக் கூறியிருந்தனர். இந்நிலையில் தெலுங்கு தேசம் கட்சியின் செய்தி தொடர்பாளர் லங்கா தினகர் இன்று பாஜக., செயல் தலைவர் ஜே.பி.,நட்டா முன்னிலையில் பாஜக.,வில் இணைந்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.