எதிர்மறை பிரசாரம்; டைம்ஸ் குழுமம், தி ஹிந்து, டெலிகிராஃப் இதழ்களுக்கு அரசு விளம்பரம் நிறுத்தம்!

Published:

advertisements - 2026

#டைம்ஸ்_குழுமத்திற்கும் #திஹிந்துவுக்கும் #டெலிகிராஃப் இதழுக்கும் மத்திய அரசு விளம்பரங்கள் நிறுத்தப் பட்டுள்ளன.

பாஜக., தலைமையிலான மத்திய மோடி அரசு முதல் கட்டமாக, முக்கிய செய்தித் தாள்களான டைம்ஸ் ஆஃப் இந்தியா, தி ஹிந்து, எகனாமிக்ஸ் டைம்ஸ், தி டெலிகிராஃப், ஆனந்த பஜார் பத்ரிகா (ஏபிபி) ஆகியவற்றுக்கான அரசு விளம்பரங்களை நிறுத்தியுள்ளது. அரசின் திட்டங்கள் குறித்து எதிர்மறையிலான செய்திகளைக் கொடுத்து அரசின் திட்டங்களை மக்களிடம் தவறான முறையில் சேர்ப்பதால் இந்த நடவடிக்கை என்று கூறப் படுகிறது.

அரசின் திட்டங்களை தவறாகக் கொண்டு சேர்ப்பவர்களுக்கு எதற்காக அரசின் திட்டங்களை விளம்பரப்படுத்தும் வகையில் அரசு விளம்பரங்கள் கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்ட ஆலோசனையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப் பட்டுள்ளதாகக் கூறப் படுகிறது.

முன்னதாக ரபேல் போர் விமானங்கள் குறித்த உண்மைக்கு மாறான செய்திகளை வெளியிட்டதற்காக மார்ச் மாதம் முதலே தி ஹிந்துவுக்கு அரசு விளம்பரங்கள் நிறுத்தப் பட்டு விட்டதாகக் கூறப் படுகிறது. அதுபோல் சமீர் விநீத் ஜெயின் சகோதரர்களின் தி டைம்ஸ் குழுமத்துக்கும் ஜூன் மாதம் முதல் அரசு விளம்பரங்கள் நிறுத்தப் பட்டுள்ளதாம்.

ALSO READ:  மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்; நகரில் போக்குவரத்து மாற்றம்!

இந்தக் குழுமங்களின் டிவி சேனல்களான டைம்ஸ் நவ், மிரர் நவ் ஆகியவையும், தேர்தல் நேரத்தின் போது, காங்கிரஸ் சார்பாக பிரசாரம் மேற்கொண்டதாக தேர்தல் ஆணையத்தில் பாஜக., புகார் கூறியிருந்தது.

பத்திரிகை விளம்பர உலக கணக்கின் படி, டைம்ஸ் குழுமம் மாதத்துக்கு ரூ.15 கோடி அளவிலான அரசு விளம்பரத்தை பெற்று வந்தது. தி ஹிந்து குழுமம் மாதம் தோறும் ரூ.4 கோடி அளவிலான அரசு விளம்பரங்களைப் பெற்று வந்தது.

இந்த விவகாரத்தில் இரு ஊடகக் குழுமங்களும் அமைதியாக இருந்த போதும், இது குறித்து புதன்கிழமை நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார் காங்கிரஸ் நாடாளுமன்றத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி. இது ஊடக சுதந்திரத்தை நசுக்குவதாக அவர் மோடி அரசு மீது குற்றம் சாட்டினார். அரசு விளம்பரங்களை வெளியிடும் டிஏவிபி மீது அவர் குற்றம் சாட்டினார்.

நேரடியாக மக்களை தொடர்பு கொள்ள முடியக் கூடிய அரசுக்கு, இந்தப் பத்திரிகைகள் இல்லாமல் வேறு பல ஊடகங்கள் மக்கள் தொடர்பில் இருக்கும்போது, எதற்காக அரசின் திட்டங்களை எதிர்மறை கண்ணோட்டத்தில் கொண்டு சேர்ப்பதற்காக அரசின் பணம் செலவழிக்கப் பட வேண்டும் என்று கேள்வி எழுப்புகின்றனர் பாஜக., ஆதரவாளர்கள்.

ALSO READ:  குடிமக்களே தெய்வங்கள்: 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உருக்கம்!

திட்டமிட்டு பொய்ப் பிரசாரம் செய்யும் இவர்களுக்கான விளம்பரங்களை நிறுத்துவது வரவேற்கத்தக்கதே என்று கருத்து தெரிவிக்கின்றனர் பாஜக.,வினர். மேலும், தமிழகத்திலும் இது போன்று அச்சு, காட்சி ஊடகங்களைப் பட்டியலிட்டு மத்திய அரசு ஒதுக்க வேண்டும் என்று கருத்து தெரிவிக்கின்றனர்!

Related articles

Recent articles

spot_img