சென்னையைத் தொடர்ந்து ஹைதரபாத்திலும்… ஒளிரும் சாலை சிக்னல்கள்!

Published:

signal lights0 in hyderabad - 2026

சாலை மீது இறங்கிய டிராபிக் சிக்னல் குறித்து இப்போது பேச்சாக இருக்கிறது.  சென்னையைத் தொடர்ந்து ஹைதராபாதிலும் இந்தப் புது முயற்சி  மேற்கொள்ளப் படுள்ளது. சென்னை ஐஜி., அலுவலகம் எதிரே சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் இது போன்ற ஒளிரும் சிக்னல்கள் சோதனை முறையில் அமைக்கப் பட்டன. அதற்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு இருந்தது.

நாம் இதுவரை டிராபிக் சிக்னல் விளக்குகள் உயரமான தூண்களின் மேல் இருப்பதையே பார்த்துள்ளோம். இனி அவை பூமி மீதும் ஒளிவீசப் போகின்றன. ஆனால் இவை அலங்கார விளக்குகள் அல்ல. வாகன ஓட்டிகள் ‘ஜீப்ரா க்ராசிங்’கைத் தாண்டாமல் சரியாக லைனில் நிற்கும்படி இவற்றை அமைத்துள்ளார்கள்.

அனலாக் டிஜிட்டல் லேப் உதவியுடன் ஹைதராபாத் போக்குவரத்து போலீசார் இவற்றை அமைத்துள்ளனர். பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் கேபிஆர் பார்க் கிராஸ் ரோடு அருகில் இவற்றை அமைத்துள்ளனர்.  விரைவில் இவற்றை நகரங்கத்தின் மற்ற சாலை சிக்னல் பகுதிகளிலும் அமைக்க யோசித்து வருகின்றனர்.

இந்த விளக்குகள் பார்ப்பதற்கு சற்றே விநோதமாகவும் வண்ண மயமாகவும் இருப்பதால் வாகன ஓட்டிகள் புதிய அனுபவத்தை உணர்கின்றனர். முக்கியமாக சாலையைக் கடந்து செல்லும் பாதசாரிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இந்த சிக்னல்கள் உள்ளன.

ALSO READ:  தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

சாலையின் மேலேயே அமைக்கப் பட்டு இருக்கும் இந்த சிக்னல்களால் வாகன ஓட்டிகள், சிக்னல் விளக்குகளைக் கடந்து முன்னுக்குச் சென்று, நான் சிக்னலைக் கவனிக்கவில்லை என்று போலீஸாரிடம் கூறிக் கொண்டிருக்க முடியாது.

எனவே இனி ஹைதராபாத் கூடலியில் பயணிக்கும் போது சாலையின் மீதே அமைக்கப் பட்டிருக்கும் இந்த சிக்னலை அவசியம் கவனித்து அதன்படி செல்லுங்கள்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img