வருது வருது.. விலகு விலகு.. திமுக., டேங்கர் லாரி வருது..!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் புகார் பெட்டி லைஃப் ஸ்டைல்

lorry dmk - 2026

சென்னையில் தண்ணி கச்டம்னாங்க. இதை தீர்ப்பதற்காக மு.க.ச்டாலின் எடுத்த அதிரடி நடவடிக்கையால் சென்னையில் தண்ணீர் லாரிகள் அதிகம் ஓடுகிறதாம். அதுவும்,  தண்ணி எங்கையும் கிடைக்காவிட்டாலும் கூட, லாரிகள் மட்டுமே அதிகம் நடையக் கட்டிக்கிட்டிருக்காம்!

எல்லா லாரிகளிலும் திமுக., பேனர் கட்டப் பட்டிருக்கணும். எல்லா லாரியிலும் மு.க.ச்டாலின் படம் இருக்க வேண்டும் என்று கட்டளைகள்!

திமுக பேனர் ஒட்டிய காலி தண்ணி லாரிகளை எல்லோர் கண்ணிலும் படும்படி சென்னையில் குறுக்க மறுக்க ஓட்டச் சொல்லி உத்தரவாம்… அதுக்காக பெட்ரோல் லாரியிலுமா!!? இப்படி செய்வீங்க என்று கேள்வி எழுப்புகின்றனர் மக்கள்.

திமுக., பேனர்களை ஏந்திச் செல்லும் இலவச விளம்பர பலகைகளாக, தட்டிகளாக தண்ணி லாரிகள் மாறிப் போயுள்ளன என்கிறார்கள்.

எனவே, உங்கள் பகுதியை திமுக., பேனர் கட்டப்பட்ட லாரி கடந்து போனால் தண்ணீர் கொடுக்காம இந்தப் பகுதியை கடந்து இந்த லாரி போகக் கூடாது; அடுத்த லாரி வந்து எங்களுக்கு தண்ணீர் தந்தால்தான் இந்த லாரியை விடுவிப்போம் என்று சென்னை மக்கள் கறாராக சொல்லி இப்படி ஓடும் தண்ணியில்லா தண்ணி லாரிகளை மடக்க வேண்டும் என்கின்றனர் நெட்டிசன்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.