nirmala parents - 2026

வரும் 2019-20 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து பேசி வருகிறார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன். இதன் மூலம் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யும் முழு நேர முதல் மத்திய பெண் நிதி அமைச்சர் என்கிற பெருமையை நிர்மலா சீதாராமன் பெறுகிறார்.

#BudgetDay2019  17 – வது மக்களவையின் முதல் பட்ஜெட் இன்று முற்பகல் 11 மணி முதல் தாக்கல் செய்யப் பட்டு வருகிறது. மக்களவையில் தனது முதல் பட்ஜெட் தாக்கல் செய்து பேசி வருகிறார் முதல் முழுநேர பெண் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்!

தங்கள் மகள் நிர்மலா தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் குறித்து நேரில் பார்ப்பதற்காக, நிர்மலா சீதாராமனின் பெற்றோர் சாவித்ரி மற்றும் நாராயணன் சீதாராமன் ஆகியோர் இன்று காலை அவைக்கு வந்தனர். முற்பகல் மக்களவையில் தாக்கல் செய்யப் படும் பட்ஜெட் உரையை நேரில் கேட்பதற்காக இன்று அவைக்கு வந்தனர்.

ALSO READ:  சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending