நிர்மலா சீதாராமனின் 2 மணி நேர பட்ஜெட் உரையில்… முக்கிய அம்சங்கள்!

nirmalaseetharaman1 - 2026

வரும் 2019-20 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து பேசி வருகிறார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன். இதன் மூலம் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யும் முழு நேர முதல் மத்திய பெண் நிதி அமைச்சர் என்கிற பெருமையை நிர்மலா சீதாராமன் பெறுகிறார்.

பட்ஜெட் ஆவணங்களை ஒரு சூட்கேஸ் பெட்டியில் எடுத்துச் செல்லும் நிதி அமைச்சர்கள் மத்தியில், நிர்மலா சீதாராமன், ஒரு பெண்ணுக்கே உரிய கலை அழகு மிளிர, பெட்டிக்கு பை சொல்லிவிட்டு, இந்திய அரசுச் சின்னம் பொறிக்கப் பட்ட ஒரு பையை கையில் எடுத்துக் கொண்டு வந்தார்.

budget - 2026

#BudgetDay2019  17 – வது மக்களவையின் முதல் பட்ஜெட் இன்று முற்பகல் 11 மணி முதல் தாக்கல் செய்யப் பட்டு வருகிறது. மக்களவையில் தனது முதல் பட்ஜெட் தாக்கல் செய்து பேசி வருகிறார் முதல் முழுநேர பெண் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்!

முற்பகல் 11 மணிக்கு தொடங்கி, மதியம் 1.10 மணி அளவில் பட்ஜெட் உரையை நிறைவு செய்தார் நிர்மலா சீதாராமன். சுமார் 2 மணி நேரம் தொடர்ந்து பட்ஜெட் உரையை அவர் வாசித்து முடித்தார். அவ்வப்போது பசவண்ணர், புறநானூறு, சுவாமி விவேகானந்தர் என பலரது கருத்துகளையும் மேற்கோள் காட்டிப் பேசினார் நிர்மலா சீதாராமன்.

அவர் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்தவை…

பார்வை அற்றோரும் தெரிந்து கொள்ளும் வகையில் ரூ.1, ரூ.2, ரூ.5, ரூ.10, ரூ.20 நாணயங்கள் அறிமுகம் செய்யப்படும்.

  • இந்தியாவின் சர்வதேச கடன் நாட்டின் ஜிடிபியில் 5%க்குள் இருக்கிறது.

  • வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் ஆதார் அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

  • தேசத்தின் வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் மற்றும் அரசு பங்களிப்பு உடன் மகளிர் மேம்பாட்டு திட்டங்களை மேற்கொள்ளப்படும்.

  • பொது வாழ்க்கையில் பெண்களின் பங்களிப்பு, 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது. இதனை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

  • பெண்கள் பங்களிப்பு மட்டுமின்றி பெண்கள் தலைமை ஏற்கவும் தொடங்கிவிட்டனர்.
    ஒவ்வொரு சுயஉதவிக் குழுவில் ஒரு பெண்ணுக்கு ரூ.1 லட்சம் கடனுதவி வழங்கப்படும்

  • வெளிநாடுகளுடன் சுமூக உறவை கடைபிடிக்கும் வண்ணம், புதிதாக 4 வெளிநாட்டு தூதரகங்கள் அமைக்கப்படும்

  • வங்கிகளில் வாராக் கடன் கடந்த ஆண்டு ஒரு லட்சம் கோடி குறைக்கப்பட்டுள்ளது.

  • உலகத் தரத்தில் 74 புதிய சுற்றுலா மையங்கள் ஏற்படுத்தப்படும்.

  • ரோபோடிக்ஸ் போன்ற நவீன துறைகளில் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க முயற்சிக்கப்படும்

  • ஸ்டார்ட்-அப் துறையை ஊக்குவிக்க தூர்தர்ஷனில் தனியாக தொலைக்காட்சி உருவாக்கப்படும்

  • கழிவு சுத்திகரிப்பிற்காக ரோபோட்கள் மற்றும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படும்

  • தேசிய விளையாட்டுக் கல்வி வாரியம் அமைக்கப்படும். “விளையாடு இந்தியா” திட்டம் விரிவுபடுத்தப்படும்.

  • கல்வித்துறையில் ஆராய்ச்சிகளை ஊக்குவிக்க தேசிய ஆராய்ச்சி அமைப்பு உருவாக்கப்படும்

  • நாடு முழுவதும் 95% நகரங்கள் திறந்தவெளி கழிவறைகள் இல்லாத நகரங்களாக மாறியுள்ளன

  • என்சைக்ளோபீடியா போன்று காந்திபீடியா உருவாக்கப்படும். இதன் மூலம் காந்தியக் கொள்கைகள் இளைஞர்களிடம் பரப்பப்படும்.

  • உலகின் மிகச்சிறந்த கல்வி முறையாக நமது புதிய கல்விக் கொள்கை இருக்கும்.

  • விவசாயிகளின் மேம்பாட்டிற்காக 10,000 புதிய அமைப்புகள் உருவாக்கப்படும். பருப்பு உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற நாடாக இந்தியா விளங்குகிறது.

தூய்மை இந்தியா திட்டத்திற்கான செயலியை ஒரு கோடி பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர்.

  • வீடுகளுக்கு குடிநீர் விநியோகிக்க “ஹர் கர் ஜல்” திட்டம் கொண்டு வரப்படும்

  • நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வரும் சூழலில், சென்செக்ஸ் திடீரென 82 புள்ளிகள் சரிந்து, 39,826 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இதேபோல் நிஃப்டி 37 புள்ளிகள் குறைந்து, 11,910 புள்ளிகளில் வர்த்தகமாகி கொண்டிருக்கிறது.

  • ஓய்வூதிய திட்டம் 3 கோடி சில்லரை வணிகர்கள், கடை உரிமையாளர்களுக்கு விரிவுபடுத்தப்படும். ஆண்டுக்கு ரூ.1.5 கோடிக்குள் வர்த்தகம் செய்யும் வணிகர்களுக்கு இந்த திட்டம் பொருந்தும்.

  • 5 ஆண்டுகளில் ரூ.80,250 கோடியில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் கி.மீ தூரத்திற்கு சாலைகள் அமைக்கப்படும்.

  • 2022ஆம் ஆண்டிற்குள் அனைத்து ஊரக பகுதிகளில் வசிக்கும் 1.9 கோடி குடும்பத்தினரும் சொந்தமாக வீடு வைத்திருப்பார்கள்.

  • 5 ஆண்டுகளில் 7 கோடி குடும்பங்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

  • சர்வதேச அளவில் பொருளாதாரம் மந்தமாக இருந்த சூழலிலும், இந்தியாவில் முதலீடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

  • சில்லறை மற்றும் வணிகம், ஊடகம், விமானத்துறை உள்ளிட்டவற்றில் அந்நிய முதலீடுகள் கிடைக்க ஊக்குவிக்கப்படும்

  • சிறு, குறு தொழில் வளர்ச்சிக்காக இந்தாண்டு ரூ.350 கோடி ஒதுக்கீடு

  • சரக்கு போக்குவரத்திற்காக உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்தை மேம்படுத்த வேண்டியுள்ளது

  • ஒரே நாடு, ஒரே மின்சார விநியோக திட்டம் கொண்டு வரப்படும்.

Click Here: தமிழகத்தில் இருந்து 6வது மத்திய பட்ஜெட்; முதல்முறை அசத்தும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

  • வாடகைக்கு குடியிருப்போருக்கான புதிய சீர்திருத்தங்கள் கொண்டு வரப்படும்.

  • 2030ஆம் ஆண்டுக்குள் ரயில்வே துறையில் ரூ.50 லட்சம் கோடி முதலீடு செய்து, அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்லப்படும்.

  • உதான் திட்டம் மூலம் சிறிய நகரங்களுக்கு குறைந்த விலையில் விமான சேவை அளிக்கப்பட்டு வருகிறது.

  • கடந்த 5 ஆண்டுகளில் 657 கி.மீ தொலைவிற்கு மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.  அந்நிய முதலீட்டை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது

  • மேக் இன் இந்தியா திட்டம் இந்தியாவின் சொத்தை அதிகரிக்கிறது. இந்த திட்டத்திற்கு மிகுந்த ஊக்கம் அளிக்கப்படும்

  • கடந்த 5 ஆண்டுகளில் ஏற்படுத்தப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்களால் ஏழை, எளிய மக்கள் பலன் அடைந்துள்ளனர்.

  • இந்தியப் பொருளாதாரம் 2.7 லட்சம் கோடி டாலராக உயரும் – மத்திய நிதியமைச்சர்

  • டிஜிட்டல் இந்தியாவின் பலனை கடைக்கோடி கிராமம் வரை கொண்டு செல்வதே அரசின் நோக்கம் – நிர்மலா சீதாராமன்

  • அனைத்து துறைகளிலும் டிஜிட்டல் இந்தியா திட்டங்கள் கொண்டு செல்ல ஆர்வம் காட்டப்படும் – மத்திய நிதியமைச்சர்

  • நிலையான, ஒளிமயமான இந்தியா மலரும் என்று நம்பிக்கை கொள்வோம். புதிய இந்தியாவை உருவாக்கும் நோக்கத்தில் அரசின் பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன – நிர்மலா சீதாராமன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக இன்று புதன்கிழமை நடைபெற்றது.மாசி வீதிகளில்...

பஞ்சாங்கம் – ஏப்ரல் 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரை திருவிழா...

திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை – வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது…

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் திமுக வேட்பாளர் வீட்டில் 122 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட...

Topics

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக இன்று புதன்கிழமை நடைபெற்றது.மாசி வீதிகளில்...

பஞ்சாங்கம் – ஏப்ரல் 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரை திருவிழா...

திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை – வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது…

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் திமுக வேட்பாளர் வீட்டில் 122 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட...

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

யானைகளின் அணிவகுப்பு.. இலஞ்சித்தார மேளம்.. திருச்சூர் பூரம் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

37 ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்தது போலவே, நீங்களும் பணமின்றி, ஆனால் பாரதத்தின் நல்ல கல்வி மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் அமெரிக்காவிற்கு வந்தீர்கள்.

Entertainment News

Popular Categories