இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தெலுங்கில் வெளிவந்து வெற்றி பெற்ற படம் நின்னு கோரி.
நானி, நிவேதா தாமஸ், ஆதி பினிசெட்டி, முரளி சர்மா, தணிகலபரணி, பிருத்விராஜ், வித்யூலேகா ராமன் உள்பட பலர் நடித்திருந்தார்கள். அறிமுக இயக்குனர் சிவா நிர்வனா இயக்கி இருந்தார். டி.வி.வி தனன்யா தயாரித்திருந்தார்.
திருமணமாகி ஒரு ஆண்டு கணவனுடன் வாழ்ந்த மனைவி, தன் கணவனுக்குத் தெரியாமல் முன்னாள் காதலனை சந்திக்க வெளிநாட்டுக்குச் செல்கிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது போன்ற கதை
இந்த படத்தைத்தான் தற்போது இயக்குனர் ஆர்.கண்ணன் ரீமேக் செய்து இயக்குகிறார். இதில் அதர்வா, அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறார்கள். மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடைப்பெற்று வருகிறது. இந்த மாத இறுதியில் இருந்து படப்பிடிப்பு தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குனர் கண்ணன் ஏற்கெனவே ஜப் வீ மெட் (கண்டேன் காதலை), டெல்லி பெல்லி (சேட்டை) ஆகிய இந்தி படங்களை ரீமேக் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது



