படிக்கும் வயதில் காதலா? 9 ஆம் வகுப்பு மாணவியை துண்டு, துண்டாக வெட்டி ஆற்றில் எரிந்த கொடுரம்……!

இந்தியா கிரைம் நியூஸ் சற்றுமுன்

vettu - 2026

காதல் எனும் பெயரால் பள்ளி பருவத்திலே சாதி மாறி, மதம் மாறி ஓடிப்போய் திருமணம் செய்பவர்களை பெற்றோர்களே கொலை செய்து வருவது ஆணவக் கொலை என கருதப்படுகிறது.

இந்த ஆணவக் கொலைகள் இந்தியா முழுவதும் சமீப காலமாக பெருகி வருகிறது.

இந்நிலையில் மேற்கு வங்க மாநிலம் மகேந்திரடோலா என்ற கிராமத்தில் பெற்றோர் எதிர்ப்புக்கு மீறி காதல் செய்த தனது 16 வயது மகளை துண்டு துண்டாக வெட்டி கொன்று உடலை கட்டைப்பையில் வைத்து கங்கை ஆற்றில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெற்ற மகளை ஆணவக்கொலை செய்த பெற்றோர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

மகேந்திரடோலா கிராமத்தில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு தன் பக்கத்து கிராமத்தில் வசிக்கும் அச்சிந்தியா மொண்டல் மீது காதல் ஏற்பட்டது.

இவர்கள் காதல் விவகாரம் குறித்து பெற்றோருக்கும் உறவினா்களுக்கும் தகவல் தெரியவந்துள்ளது.

. இந்த பள்ளி பருவ காதலுக்கு பெற்றோர்கள் மற்றும் உறவினா்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனா்.. மேலும் இவர்களின் பள்ளி பருவ காதல் விவகாரம் பஞ்சாயத்து போலீஸ் ஸ்டேசன் வரை போனது. இருவரையும் காவல் நிலையத்தில் வைத்து கண்டித்துள்ளனர்.

ஆனால் காதலா்கள் பெற்றோர்களின் கண்டிப்பையும் மீறி இருவரும் அடிக்கடி சந்தித்து பேசியுள்ளனர்.

இதனால் கடும் ஆத்திரமடைந்த பெற்றோர் கடந்த வெள்ளிக்கிழமை தன் மகளை அடித்து கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி கட்டைப்பையில் வைத்து கங்கை ஆற்றில் வீசி விட்டனர்.

இது குறித்து ஊர்மக்கள் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் மாணவியின் வீட்டிற்கு சென்று, மாணவியின் அப்பா டிரின் மொண்டல் , அம்மா சுமதி மொண்டல் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

இந்த சம்பவம் ஆணவக் கொலையாக இருக்கக்கூடும் என சந்தேகித்து இருவரையும் பூட்னி காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.

போலீசார் இருவரையும் விசாரித்ததில் தனது மகள் பக்கத்து ஊர்க்காரனான அச்சிந்தா மொண்டல் என்பவரை காதலித்ததாகவும் நாங்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தங்களின் பேச்சை கேட்காத காரணத்தால் மகளை கொலை செய்து ஆற்றில் வீசினோம் என கூறியதாக போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்து ஐபிசி கண்காணிப்பாளரின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக மால்டோ மாவட்டம் போலீஸ் எஸ்பி அலோக் ராஜாரியா தெரிவித்தார். மேலும் ஆற்றிலிருந்து உடலை மீட்க முயற்சிகள் நடந்து வருவதாகவும், சடலத்தை கண்டுபிடிப்பதற்காக மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளதாகவும் எஸ்பி அலோக் ராஜாரியா தெரிவித்தார்.

பெற்றோர்கள் எதிர்ப்பை மீறி காதலித்த மகளை வெட்டி படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை எற்படுத்தி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.