திட்டமிட்டபடி இன்று நடக்கிறது நம்பிக்கை வாக்கெடுப்பு

Published:

Vidhan Soudha bangalore - 2026

கர்நாடக சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என சபாநாயகர் அறிவித்துள்ளது.

கர்நாடகாவில் காங்கிரஸ், ம.ஜ.த கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனை நீடிக்கவிடக் கூடாது என்பதற்காக காங்கிரஸ் உறுப்பினர்களை மூளைச்சலவை செய்து குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருகிறார் பா.ஜ.க.,வின் எடியூரப்பா.

இதனையடுத்து, கூட்டணி அரசின் மீது அதிருப்தி உள்ளதாகக் கூறி காங்கிரஸின் 13 எம்.எல்.ஏ.,க்களும், மஜதவின் 3 எம்.எல்.ஏ.,க்களும் ராஜினாமா செய்தனர். இவர்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்காததை அடுத்து 10 காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இதனை விசாரித்த நீதிபதிகள் கடந்த 16ம் தேதி வரை கர்நாடக மாநில அரசு தற்போது உள்ள நிலையே தொடரவேண்டும் என உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related articles

Recent articles

spot_img