கார்கில் 20: குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!

Published:

kargil 3 - 2026

கார்கில் போர் வெற்றி தினத்தை முன்னிட்டு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட டிவிட்டர் செய்தியில் …

இந்தியாவை பாதுகாத்தவர்களின் வீரத்துக்கும், துணிச்சலுக்கு தலைவணங்குவோம்!  1999-ம் ஆண்டு கார்கில் போரில் ஆயுதப்படைகள் தீரமுடன் போரிட்டு வென்றனர் என்று குடியரசு தலைவர் தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

IMG 20190726 WA0002 - 2026பிரதர் நரேந்திர மோடி தமது டிவிட்டர் செய்தியில்… கார்கில் விஜய் தினத்தன்று அன்னை பாரதியின் வீர மகன்கள் அனைவருக்கும் எனது இதய பூர்வமான பாராட்டுகள். இந்த நாள் நமது வீரர்களின் தைரியம், துணிச்சல் மற்றும் அர்ப்பணிப்பை நினைவூட்டுகிறது. இந்த நேரத்தில், தாய்நாட்டின் பாதுகாப்பில் வாழ்வை அர்ப்பணித்த அந்த வலிமைமிக்க வீரர்களுக்கு எனது சிரம் தாழ்ந்த அஞ்சலி. ஜெய் ஹிந்த்! – என்று குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ:  சதுரகிரி ஆடி அமாவாசை முன்னேற்பாட்டுப் பணிகள்; அதிகாரிகள் ஆய்வு!

Related articles

Recent articles

spot_img