spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியாஜம்மு காஷ்மீர் வங்கியும் காஷ்மீர் அரசியலும்!

ஜம்மு காஷ்மீர் வங்கியும் காஷ்மீர் அரசியலும்!

- Advertisement -

ஜம்மு காஷ்மீர் வங்கியும் காஷ்மீர் அரசியலும்!

1) நேற்று பிரதமர் மோடியை ஜம்மு காஷ்மிர் நேஷனல் கான்ஃபரன்ஸ் தலைவரும் முன்னாள் முதல்வருமான டைனஸ்டி ஃபரூக் அப்துல்லா சந்தித்து, “மாநில தேர்தலை விரைந்து நடத்த” கோரினார் – செய்தி.

இனி… நிஜமான சம்பவங்களின் அடிப்படையில் ஒரு கான்ஸ்பிரஸி தியரி – கீழே.

2) இந்த ஜூன் மாதம் ஜம்மு காஷ்மீர் வங்கியில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மோசடி செய்ததாக அந்த வங்கியின் சேர்மன் பர்வேஸ் அஹமது மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் அமலாக்க பிரிவு தேடுதல் வேட்டை நடத்தி வழக்கு பதிவு செய்தது என்பதும்…

3) அந்த தேடுதல் வேட்டையில் ஜம்மு காஷ்மீர் வங்கியை ஒரு ஏ.டி.எம் போல உபயோகித்து மெஹபூபா முஃப்தி & கட்சியினர், ஃபரூக் அப்துல்லா & கட்சியினர், பிரிவினைவாத போராளிகள், பயங்கரவாதிகள் அத்தனை ஆயிரம் கோடிகளை அடித்தார்கள் என்ற விவரம் வெளிவந்ததும்…

4) “பிரிவு 370 தாற்காலிகமானதே” என பாராளுமன்றத்தில் அமித் ஷா பேசியதற்கு, “பிரிவு 370 நிரந்தரமானது. பிரிவு 370 நிரந்தரமானதில்லை என்றால், ஜம்மு காஷ்மிரின் இந்தியாவுடனான இணைப்பும் (accession to India) நிரந்தரமானதில்லை (நாங்கள் பிரிந்து போவோம்)” என்று ஃபரூக் நெஞ்சை நிமிர்த்தி ஜூன் இறுதியில் சொன்னதும்…

5) கடந்த வாரம் ஜம்மு காஷ்மீருக்கு மத்திய அரசு 10 ஆயிரம் இராணுவ வீரர்களை அதிகப்படியாக அனுப்பியதற்கு, “பிரிவு 35ஏ, பிரிவு 370ஐ நீக்கவே இந்த அதிகப்படி படை. நாங்கள் பொங்கி எழுவோம். ரத்த ஆறு ஓடும்” என ஃபரூக்கும் மெஹபூபாவும் பொங்கியதும்…

5) “ஜம்மு காஷ்மீர் வங்கியில் ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் அசோஷியேனின் பணத்தை (ரூ 100 கோடிக்கும் மேல்) அதன் தலைவர் ஃபரூக் அப்துல்லா தகுந்த ஆவணங்களில்லாமல் வெவ்வேறு கணக்குகளில் முறைகேடாக வைத்து பின் அந்த பணத்தை எடுத்து மோசடி செய்த விவகாரத்தில் நேற்று அமலாக்க பிரிவு ஃபரூக் அப்துல்லாவை பல மணி நேரம் விசாரித்தது” – என்ற செய்தியும்…

6) (அமலாக்க பிரிவின் துருவல் முடிந்த கையோடு) நேற்றே பிரதமர் மோடியை ஃபரூக் தன் மகன் ஒமருடன் சந்தித்ததை ஊடகங்கள், “மாநில தேர்தலை விரைந்து நடத்தவே இந்த சந்திப்பு” என சொல்வதும்…

நம்பும்படியாக இல்லை ???? !

“பாஸ்… 370, 35ஏ பிரிவை நீக்கிக்கோங்க. எங்களை ஒண்ணும் செஞ்சிடாதீங்க.” என்று கெஞ்சினார்களா அப்துல்லாக்கள்? ஊடகம் விசாரிக்க வேண்டும்!

குறிப்பு: ஜம்மு காஷ்மீர் தேர்தல் இந்த ஆண்டு இறுதிக்குள் வருவது உறுதியாக தெரிகிறது. அம்மாநில பாஜக தலைவர்களை டில்லிக்கு அழைத்து நேற்று பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறது டில்லி தலைமை. அந்த தேர்தலை சீர்குலைக்க பாகிஸ்தான் பெருமுயற்சி செய்வதால் தான் அந்த 10 ஆயிரம் துருப்புகள். அது போதாதென்று நேற்று மேலும் 25 ஆயிரம் வீரர்களை காஷ்மீருக்கு அனுப்பியுள்ளது மத்திய அரசு.

மெஹபூபாவுக்கு பதில் அப்துல்லா பாஜகவுடன் கூட்டு வைத்து அம்மாநில தேர்தலில் ஜெயிக்க வாய்ப்பு. ஜெயித்து அம்மாநிலங்களவையில் 370, 35ஏ பிரிவுகளை நீக்க தீர்மானம் நிறைவேற்றப்படலாம். அப்படி நிறைவேற்றப்பட்டதும் ஜனாதிபதி ஒப்புதல் கிடைக்கும். “ஜம்மு காஷ்மீர் மாநிலமே தீர்மானம் இயற்றிவிட்டது. இனி பிரிவினைவாதம் பேசுவோருக்கு லாடம் கட்டப்படும்” என்ற நிலை வரலாம்…

“எந்த துருப்பு சீட்டை எப்போது போட வேண்டும்” என்று மோடியும் ஷாவும் ஒரு புத்தகம் எழுதினால் பின்னால் வரும் சந்ததிக்கு பயனளிக்கும் !

Jun 10, 2019 – State netas may feel heat as raids intensify against ex-J&K Bank chief

Jul 1, 2019 – If Article 370 is temporary, then our accession to India is also temporary: Farooq Abdullah

Jul 27, 2019 – Centre rushes 10,000 troops to Kashmir

Aug 1, 2019 – Rs 100cr plus fraud in J&K cricket: ED grills Farooq Abdullah

Aug 1, 2019 – Omar Abdullah-led NC delegation Meets PM Modi, Seeks Assembly Elections Before Year-end

Aug 1, 2019 – 25,000 More Troops Being Moved To Kashmir, Week After 10,000-Strong Push

  • பாமரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe