மகளோடு பிரபல நடிகை தற்கொலை ! வாய்ப்புக் கிடைக்காத விரக்தி ?

இந்தியா கிரைம் நியூஸ் லைஃப் ஸ்டைல்

thukku 1 - 2026திரைத்துறையில் வாய்ப்புகள் இல்லாமல் சினிமாக்காரர்கள் நடுத்தெருவுக்கு வருவதும், அதனை ஏற்கமுடியாமல் தற்கொலை செய்துகொள்வதும் சினிமாத் துறையில் புதிதல்ல.deadbody - 2026கையில் காசு புரளும் போது செல்வ செழிப்புடன் செல்வாக்காக வாழ்ந்துவிட்டு பணமில்லாமல் ஒரு சாதாரண வாழ்க்கையை வாழ முடியாமல் பல நடிகர் நடிகைகள் உயிரை விட்டுள்ளனர். அந்த வகையில் சீரியல் நடிகை ஒருவர் தற்போது தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.prakanya 3 - 2026மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள கல்வா பகுதியை சேர்ந்தவர் நடிகை பிரக்ன்யா. இவருக்கு வயது 40 இவர் இந்தி மற்றும் மராத்தி சீரியல்களிலும், படங்களிலும் நடித்து வந்தார்.

இவருக்கு பார்கர் என்ற கணவரும் ஸ்ருதி என்ற 17 வயது மகளும் உள்ளனர். இந்நிலையில் நேற்று காலை பிரக்ன்யாவின் கணவர் பார்கர் வழக்கம்போல் ஜிம்முக்கு சென்றுள்ளார்.காலை 9.30 மணியளவில் வீட்டிற்கு திரும்பியுள்ளார் பார்கர். prakanya 1 - 2026அப்போது வீடே நிசப்தமாக இருந்துள்ளது. வீடு முழுவதும் மனைவியையும் மகளையும் அழைத்தபடியே தேடிய அவர் பெட்ரூமூக்கு சென்றுள்ளார்.

ALSO READ:  விடுதலைப் போரில் சனாதனத்தின் பங்களிப்பு!

அப்போது பெட்ரூமில் உள்ள ஃபேனில் பிரக்ன்யா தூக்கில் தொங்கியபடி இருந்துள்ளார். மகள் ஸ்ருதி படுக்கையில் பேச்சு மூச்சில்லாமல் இருந்துள்ளார்.prakanya 4 e1565432200782 - 2026இதனை கண்டு பதறிய பார்கர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் இரண்டு பேரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர்.prakanya - 2026இந்நிலையில் பிரக்ன்யா வீட்டில் இருந்து அவர் தற்கொலைக்கு முன்பாக எழுதிய கடிதத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். அதில் என் மகளை கொன்றுவிட்டு நானும் தற்கொலை செய்து கொள்கிறேன்.policeinvestigation - 2026
இதற்கு யாரும் பொறுப்பல்ல என்று அந்தக் கடிதத்தில் எழுதியுள்ளார் பிரக்ன்யா. திரைத்துறையில் வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தில் மன அழுத்தத்தில் இருந்த பிரக்ன்யா இந்த முடிவை எடுத்திருக்கலாம் என போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.