புவனேஸ்வரம்: ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் இணைய சமவாய்ப்புக்கு ஆதரவு தெரிவித்து குரல் கொடுத்துள்ளார். இணைய சமவாய்ப்பை அசைத்துப் பார்க்கும் முயற்சி, வளர்ந்து வரும் ஐ.டி. துறைக்கு பெரும் பொருளாதாரப் பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார். நவீன் பட் நாயக் டிராய் தலைவர் ராகுல் குல்லாருக்கு எழுதியுள்ள கடிதத்தில், “இணைய சமவாய்ப்பை அசைத்துப் பார்க்கும் முயற்சியானது, வளர்ந்து வரும் ஐ.டி. துறைக்கு பெரும் பொருளாதார பின்னடைவை ஏற்படுத்தும். அது ஏழைகளையும் பாதிக்கும். இப்போது பணக்காரர்கள் மட்டுமின்றி இணைய தொழில்நுட்ப சேவையை ஏழைகளும் அதிகம் பயன் படுத்துகின்றனர். ஏழைகள் பயன்படுத்தும் சேவைகள் பல இணையம் மூலம் வழங்கப்படுகின்றன. எனவே இணையத்தில் சமவாய்ப்பு நிலைநாட்டப்பட வேண்டும். ஒரு குறிப்பிட்ட செயலியை மட்டுமே ஒரு தனியார் தொலைதொடர்பு நிறுவனம் விரும்புகின்ற ஒரே காரணத்துக்காக அதை இணைய வாடிக்கையாளர் மீது திணிக்கக் கூடாது” என்று குறிப்பிட்டுள்ளார். செல்போன்களில் இயங்கும் ஆப்ஸ்களில் சிலவற்றுக்கு மட்டும் முன்னுரிமை அளிக்க டிராய் முயற்சிக்கிறது. எதிர்காலத்தில் செல்போன்கள் வழியாகவே மிக அதிக அளவில் இணையம் பயன்படுத்தப்படும் என்பதால், செல்போன்கள் வழியாக வழங்கப்படும் சேவைகளில் இந்த விதிமுறைகளைத் திணிக்க டிராய் முயற்சி செய்கிறது என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதை முன்வைத்து ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் டிராய் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இணைய சமவாய்ப்புக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் நவீன் பட் நாயக்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari