கனிமொழி வெற்றியை எதிர்த்து தமிழிசை வழக்கு! பதிலளிக்க நோட்டீஸ்!

Published:

kanimozhi thamizisai - 2026

தூத்துக்குடியில், திமுக., சார்பில் போட்டியிட்ட கனிமொழியின் வெற்றியை எதிர்த்து பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

திமுக எம்.பி கனிமொழி, இந்த மனுவுக்கு உரிய பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

குறைபாடான வேட்புமனுவை கனிமொழி தாக்கல் செய்ததாக மனுவில் புகார் தெரிவிக்கப் பட்டிருந்தது. மேலும், ஆரத்தி எடுத்த பெண்களுக்கு ரூ.2,000 பணம் வழங்கப்பட்டதாகவும் மனுவில் தமிழிசை குற்றச்சாட்டு தெரிவித்திருந்தார்.

முன்னதாக கனிமொழி வெற்றியை எதிர்த்து தொகுதியைச் சேர்ந்தவர் ஒருவரும் வழக்கு பதிவு செய்திருந்தார். அதற்கு பதிலளிக்க வேண்டும் என்று கனிமொழி மற்றும் தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுபியுள்ளது குறிப்பிடத் தக்கது.

Related articles

Recent articles

spot_img