நீதிமன்ற அறிவுறுத்தல்: பேனர் வேண்டாமென கட்சியினருக்கு டிடிவி தினகரன் வேண்டுகோள்!

கிரைம் நியூஸ் சற்றுமுன் சென்னை
ttv - 2026

சென்னை பள்ளிக்கரணையில் பேனர் சரிந்து கீழே விழுந்ததில் சுபாஸ்ரீ என்ற பெண் நேற்று உயிரிழந்தார். இது பொதுமக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம், தாமாக முன்வந்து வழக்கு எடுத்து, தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும், சட்டவிரோதமாக பேனர் வைக்க கூடாது என முதலமைச்சர், கட்சியினருக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும். அனைத்து கட்சி தலைவர்களும் தங்களது கட்சியினருக்கு அறிவுறுத்த வேண்டும் என்று தெரிவித்து இருந்தது.

இதைஅடுத்து, பல்வேறு கட்சித் தலைவர்களும் தங்கள் தொண்டர்களுக்கு இந்த அறிவுறுத்தலை செய்து வருகின்றனர். அமமுக., பொதுச் செயலர் டிடிவி தினகரனும் தங்கள் கட்சியினருக்கு டிவிட்டர் பதிவின் வாயிலாக பேனர்கள் வைக்காதீர்கள் என அறிவுறுத்தியுள்ளார். அவரது வேண்டுகோள்… இது

விளம்பரப்பதாகையால் பலியான இளம் பெண் சுபஸ்ரீக்கு இரங்கல்:
காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!
கழக நிர்வாகிகளுக்கு பதாகைகள் வைக்கவேண்டாம் என வேண்டுகோள்.



Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.