December 5, 2025, 9:06 PM
26.6 C
Chennai

ஆளுநர் மாளிகையில் நடந்தது என்ன? வெள்ளை அறிக்கை விடுவாரா ஸ்டாலின்..?!

stalin kanimozhi trbalu duraimurugan - 2025

ஹிந்தி மொழியைத் திணிக்க எண்ணும் அமித் ஷாவுக்கு எதிராக போராட்டம் நடத்தப் படும் என்று அறிவித்த திமுக, தலைவர் மு.க.ஸ்டாலின், திடீரென ஆளுநரை சந்தித்த பின், தனது போராட்ட அறிவிப்பை திரும்பப் பெற்றார். போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப் படுகிறது என்று கூறினார்.

ஆனால் மு.க.ஸ்டாலினின் இந்த அறிவிப்பின் போது, உடன் இருந்த கனிமொழி, டி.ஆர்.பாலு, துரைமுருகன் ஆகியோரின் முகங்கள் வெளிறிப் போய் இருந்ததால், அவர்களின் முகங்கள் ஆயிரம் கதை சொல்வதாக சமூகத் தளங்களில் கருத்துகள் பகிரப் பட்டன.

உண்மையில் அங்கே என்ன நடந்தது? ஏன் தனது போராட்ட அறிவிப்பை திடீரென திரும்பப் பெற்றார் ஸ்டாலின் என பலரும் பல விதங்களில் யோசித்து, தங்களுகுத் தெரிந்த விதத்தில் எல்லாம் கதைகளைப் புனைந்து வருகின்றனர். சிலர் என்ன நடந்திருக்கும் என பின்னணியை ஊகித்து, ஊகத்தின் அடிப்படையில் சில கருத்துகளைப் பதிவு செய்தனர்.

வாட்ஸ் அப் வாயிலாக சில கருத்துகள் வைரலாகப் பரவின. அவற்றில் ஒன்று…

கவர்னரை சந்தித்த தி.மு.கவினரிடம் 23 தனித்தனி கோப்புகள் காண்பிக்கப் பட்டனவாம்.

  1. முரசொலி அறக்கட்டளை குறித்த 3 கோப்புகள். தனியார் அறக்கட்டளை அனைத்தும் அரசுடமையாக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
  2. தி.மு.கவின் மாவட்ட அலுவலகங்கள், 16 நபர்கள் கொலைகள் மற்றும் தி.க மற்றும் தி.மு.கவினரின் தீவிரவாதிகளுடனான தொடர்புகள் குறித்த     6 கோப்புகள்.
  3. கலைஞர் டி.வி குறித்த 2 கோப்புகள்.
  4. மு.க.அழகிரியின் கடிதம் அடங்கிய குடும்ப சொத்து குறித்த 2 கோப்புகள்.
  5. கனிமொழி குடும்ப வியாபார – தொழில் தொடர்பான 2 கோப்புகள்.
  6. துரைமுருகன், டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்ஷகன் உள்ளிட்ட 1321 பேரின் 1967-2017 வரையான 50 ஆண்டு சொத்து வளர்ச்சி மற்றும் வெளிநாட்டு முதலீடுகள் குறித்த 3 தொடர் கோப்புகள்.
  7. தயாநிதி – கலாநிதி வழக்கு, சன் டிவி தடை உட்பட கருணாநிதியின் சகோதரிகள் குடும்பத்தினர் சொத்து விவரம் அடங்கிய 3 கோப்புகள்.
  8. ஸ்டாலின் மருமகன் சபரீசன் திருவிளையாடல் குறித்த 2 கோப்புகள்.
  9. மேலும் சில தஸ்தாவேஜ்கள்.

இவற்றை முதலில் படித்துப் பார்த்தனராம். எள்ளளவுகூட தவறான குறிப்புகள் இல்லையாம். இருவர் முகமும் இருண்டு விட்டதாம். பின்னர் தஸ்தாவேஜ்கள் அனைத்தும் ஆளுனர் தனி அறைக்கு கொண்டு செல்லப் பட்டனவாம்.

கவர்னரின் பார்வையாளர் அறையில் தி.மு.கவினர் மட்டும் சிறிது நேரம் தனித்து விடப்பட்டனராம். அப்போது கண்களில் மரணபயத்துடன் ஸ்டாலினிடம், “இனி எல்லாம் அவ்வளவுதான்”, இங்கு எதுவும் பேசிக் கொள்ள வேண்டாம், நம்மைச் சுற்றி காமிராகள் உள்ளன என்றாராம்.

மீண்டும் புன்னகையுடன் பார்வையாளர் அறைக்கு வந்த கவர்னர், “சரி சென்று வாருங்கள்” என்றாராம். அப்போது வேண்டுமென்றே “மோடியையும், அமித்ஷாவையும் சமாதானப்படுத்த முடியாது” என்று ஹிந்தியில் கூறி அனுப்பி வைத்தாராம். வெளியில் வந்ததும் போராட்டம் ஒத்திவைப்பாம். இனி தினம் தினம் போராட்டம்தான். யாருக்கு? ஆங்… யாருக்கோ!.

இன்னும் ஒன்று மிச்சம் இருக்கு, அதையும் படித்துவிட்டு ஒரு முடிவுக்கு வரலாம்.

செப்டம்பர் 20-ஆம் நாளில் இந்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை திமுக நடத்துவது, “அமித்ஷா”விற்கு நேரடியாக எதிரானது எனக் கருதுவதால், கவர்னர் மூலம் ஸ்டாலினைக் கூப்பிட்டு, “தனியாக மிரட்டி” விட்டார்கள் எனவும் கூறுகிறார்கள்;.

அரசியல் ரீதியாக அமித்ஷா “இந்தி எதிர்ப்பை” எதிர்கொள்வதாக இருந்தால், உள்துறை அமைச்சர் ஒரு தன்னிலை விளக்க அறிக்கையைக் கொடுத்துவிட்டு, மக்களவை திமுக தலைவர் டி.ஆர்.பாலுவையோ, நாடாளுமன்ற குழு ஒன்றின் தலைவர் கனிமொழியையோ, அழைத்து “ஸ்டாலினிடம் பேசி, போராட்டத்தை வாபஸ் வாங்கச் சொல்லுங்கள்” என்று கூறியிருக்கலாமே?

எதற்காக, கவர்னர் புரோஹித் மூலம் அழைத்து, “தனியாக மிரட்டி” வாபஸ் வாங்கச் செய்திருக்க வேண்டும்?  கவர்னரும், ஸ்டாலினுடன் சென்ற துரைமுருகன், பாலு, கனிமொழி, டி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோரை சேர்த்தே நேரில் சந்தித்து பேசி இருக்கலாமே? எதற்கு “ஸ்டாலினை மட்டுமே தனியாக” பார்க்க வேண்டும்?

இப்படிப்பட்ட கேள்விகளை எழுப்புகிறார்கள். கவர்னரை சந்தித்து விட்டு வெளியே வந்து ஊடகத்தார்களை சந்திக்கும்போது, “ஸ்டாலின், டி.ஆர்.பாலு, துரைமுருகன், டி.கே.எஸ். இளங்கோவன், கனிமொழி” யாருடைய முகத்திலும் “ஈ ஆடவில்லையே  ஏன்?” மிரட்சியான மூஞ்சியை வைத்துக் கொண்டுதானே இருக்கிறார்கள்? என்றும் கேட்கிறார்கள்.

stalin - 2025

இந்நிலையில், வழக்கம் போல் டிவிட்டர் பதிவுகளில், ஸ்டாலின் மற்றும் கனிமொழி, டி.ஆர்.பாலு படங்களும் வீடியோ செய்தியும் வைரலாகின.

அதில் ஒருவர் டிவிட்டர் பதிவில் வெளியிட்டுள்ள கருத்தில்…

கவர்னர் மாளிகை தகவல்களை அறியக்கூடிய வட்டாரங்களில் உலாவும் தகவல்⬇⬇

கவர்னர் தங்களை சந்திக்கவந்த மூவர் அணியிடம் மூன்றே மூன்று வரிகள் மட்டுமே பேசினார் என்று தெரிகிறது !

ஒன்று : இந்தி எதிர்ப்பு போராட்டத்தால் தமிழகத்தில் ஏற்படும் அரசு சொத்து இழப்புகள் திமுகவின் தலைவரிடம் கடுமையாக வசூலிக்கப்படும்.

இரண்டாவது: இந்த போராட்டத்தில் வன்முறைகள் ஏற்பட்டு உயிர்பலி ஏதாவது நிகழ்ந்தால் அது நேரடியாக திமுக நிர்வாகிகள் முதல் குற்றவாளிகளாக சேர்க்கப்படுவார்கள்.

மூன்றாவது: தற்போதைய காஷ்மீர் நிலவரத்தால் ஏற்பட்டுள்ள மிகப்பெரும் பாதுகாப்பு சவால்களால் பாதுகாப்புத் துறை மிகக்கடுமையான டென்ஷனில் உள்ளது

இந்நிலையில் மத்திய பாதுகாப்பு தலைமைகள் கேட்டுக்கொண்டால், திமுகவின் முன்னனி தலைவர்கள் காஷ்மீரில் ஃபருக் அப்துல்லாவை கைது செய்த அதே பொது பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் (இதில் கைது செய்யப்பட்டவர்களுக்கு இரண்டு வருடம் எந்த நீதிமன்றத்தாலும் தலையிடமுடியாது)

So now u understand y the “Hindi imposition” protest was taken vapas! Same with #Article370

https://twitter.com/Raji_Iyer112/status/1175256040188678144
  • என்று ஒருவர் கருத்திட்டுள்ளார்.

இதனிடையே, கவர்னர் மாளிகையில் என்ன நடந்தது என்பது குறித்து ஸ்டாலின் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்..! என்ற கோரிக்கைகளை டிவிட்டர் வாசிகள் வெளிப்படுத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories