ஆக… விக்கிரவாண்டி விக்கிட்டு போய்டிச்சு! நாங்குநேரி நக்கிட்டு போய்டிச்சு!

சற்றுமுன் சென்னை லைஃப் ஸ்டைல்
stalin letter - 2026

ஆக.. ஆக… விக்கிரவாண்டி விக்கிட்டு போயிட்டுது… நாங்குநேரி நக்கிட்டு போயிட்டுது… – என்று ஸ்டாலின் மைண்ட் வாய்ஸ் சொல்வது போல், இரு தொகுதி இடைத்தேர்தலில் திமுக., பெற்ற தோல்வி குறித்து சமூகத் தளங்களில் கேலியும் கிண்டலும் செய்து வருகிறார்கள்.

ஆனால், திமுக., தலைவர் ஸ்டாலின் இந்தத் தோல்வி குறித்து கருத்து தெரிவித்த போது, வெற்றி கண்டு களிப்பதும் தோல்வி கண்டு துவள்வதும் திமுக.,வின் வழக்கமில்லை என்று கூறியுள்ளார்.

இடைத்தேர்தலில் பணபலம், அதிகார துஷ்பிரயோகம், சாதி உணர்வையும் மீறி, பல்லாயிரக்கணக்கான மக்கள் திமுக கூட்டணிக்கு வாக்களித்துள்ளதாக திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இடைத்தேர்தல் முடிவு தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர், சில கட்சிகள் திட்டமிட்டு சாதி உணர்வை கிளப்பினர் என்றும், என்றாலும் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்ற அண்ணாவின் கூற்றுப்படி தீர்ப்பினைத் தலைவணங்கி ஏற்பதாகவும் கூறியுள்ளார்.

திமுக வை பொறுத்தவரையில், வெற்றி பெற்றால் களிப்பிலாடுவதும், தோல்வியில் துவண்டு விடுவதும் இல்லை என்றும், இடைத் தேர்தலில் இரவு பகல் பாராது உழைத்த தேர்தல் பொறுப்பாளர்கள் அடுத்தடுத்த தேர்தல் களத்துக்கும் சேர்த்து பணியாற்றி இருப்பதாகவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.