குற்றாலம் அருவியில் குளிக்க தடை!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சுற்றுலா நெல்லை லைஃப் ஸ்டைல்

courtallam aug22 - 2026குற்றாலம் அருவியில் குளிக்க தடை விதிக்கப் பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் குற்றாலம் அருவியில் பலத்த மழை காரணமாக அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து குற்றாலம் ஐந்தருவி மெயின் அருவி ஆகிய அருவிகளில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

courtallam aug22a - 2026இன்று காலை முதல் தென்காசி செங்கோட்டை குற்றாலம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது சுமார் மூன்று மணி நேரத்திற்குமேல் இடைவிடாமல் பெய்த மழையினால் குற்றாலம் அருவிக்கு நீர்வரத்து அதிகரித்தது.courtallam fivefalls - 2026

அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக பாதுகாப்பு வளைவை தாண்டி நீர் விழுந்தது இதனால் போலீசார் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிப்பதற்கு தடை விதித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.