பி.இ. படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் தற்போது வரை இணையத்தில் வெளியாகவில்லை.
பி.இ. படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் இன்று காலை 10 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது வரை இணையத்தில் வெளியாகவில்லை என்று கூறப்படுகிறது.
சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் பி.இ. படிப்புக்கான தரவரிசைப் பட்டியலை உயர்பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து பி.இ. படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் இன்று காலை 10 மணிக்கு இணையதளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. www.annauniv.edu என்ற இணையதளத்தில் தற்போது வரை பி.இ. படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் வெளியாகவில்லை.
இந்நிலையில் அறிவித்தப்படி வெளியாகாத காரணத்தினால் பி.இ. படிப்புக்கு விண்ணப்பித்தவர்களால் தரவரிசையை அறிந்து கொள்ள முடியவில்லை. தொழில் நுட்ப கோளாறு காரணமாக பி.இ. தரவரிசைப் பட்டியலை இணையதளத்தில் பதிவேற்றுவதில் தாமதம் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. https://www.tnea.ac.in/adata/index.php
பி.இ.க்கு விண்ணப்பித்தவர்களில் முதல் 10 பேரின் விவரங்களை மட்டுமே அமைச்சர் அன்பழகன் வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் நண்பகல் 12 மணிக்குள் தரவரிசைப் பட்டியல் இணையதளத்தில் பதிவேற்றப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம் அளித்துள்ளது.




