spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசற்றுமுன்'நம்பி ஓட்டு போட்டோம்! நடுத் தெருவில் நிற்கிறோம்!' உதய்... செம கலாய்!

‘நம்பி ஓட்டு போட்டோம்! நடுத் தெருவில் நிற்கிறோம்!’ உதய்… செம கலாய்!

- Advertisement -
IMG 20210715 WA0013

நம்பி ஓட்டு போட்டோம் … நடுத்தெருவில் நிற்கிறோம் என மக்கள் கருத்து தெரிவிப்பதாகவும் … தற்போது நீட் தேர்வின் விவகாரத்தால் மாணவர்களுக்கு ஏமாற்றத்தை திமுக முதல் பரிசாக அளித்துள்ளது என்றும்் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதய குமார் பேசினார்!

நம்பி ஓட்டு போட்டு போட்டோம் நடுத்தெருவில் நிற்கிறோம் என மக்கள் கருத்து தற்போது நீட் தேர்வின் விவகாரத்தால் மாணவர்களுக்கு ஏமாற்றத்தை திமுக முதல் பரிசாக அளித்துள்ளது
என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்

மதுரை புறநகர் மேற்கு மாவட்ட மகளிரணி சார்பில் கலந்தாய்வு கூட்டம் திருமங்கலம் அருகே உள்ள அம்மா கோவிலில் நடைபெற்றது இதற்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் லட்சுமி தலைமை தாங்கினார்.


இந்த கூட்டதிற்கு முன்னாள் அமைச்சரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் ஆர் பி உதயகுமார் திருமண நிதி உதவி தொகை வழங்கி பேசியதாவது
.
..

இந்த கூட்டத்தில் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன்,மாநில அம்மா பேரவை துணைசெயலாளர் வெற்றிவேல், அம்மா சேரிடபுள் டிரஸ்ட் செயலாளர் யு பிரியதர்ஷினி,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாண்டியம்மாள், மாவட்ட கழக பொருளாளர் திருப்பதி,பொதுக்குழு உறுப்பினர் சுமதி சாமிநாதன், திருமங்கலம் ஒன்றியக்குழு தலைவர் லதா ஜகன்,ஒன்றிய கழகச் செயலாளர்கள் அன்பழகன், ராமசாமி, மகாலிங்கம், மாவட்ட அணி நிர்வாகிகள் ஜஹாங்கீர், சிங்கராஜ பாண்டியன், சரவணபாண்டியன், மகேந்திரபாண்டியன், ராமகிருஷ்ணன்,பேரூர் கழக செயலாளர்கள் நெடுமாறன், பாலசுப்பிரமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது

திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது எங்களிடம் ஆட்சி பொறுப்பு இருந்தால் நீட் ரத்து செய்ய வழி தெரியும் என்று கூறினார்கள் கடந்த சட்டமன்ற தேர்தலில் பிரச்சாரத்தில் கூட நீட்டை ரத்து செய்ய வழி எங்களுக்கு தெரியும் என்று கூறி அதைத் தேர்தல் வாக்குறுதியாக கொடுத்தார்கள்

அதிமுக ஆட்சியின்போது எடப்பாடியார் நீட் தேர்வில் கடைசி வரை சட்டப் போராட்டம் நடத்தினார் நீட்க்கு எதிராக மசோதாவை நிறைவேற்றி ஒப்புதலுக்கு வைத்தார்சமூக நீதிக்கு எதிரானது என்று கூட போரடினார்

இது ஒருபுறம் இருந்தாலும் நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழி வகை கிடைக்கும் வகையில் இந்தியாவுக்கே வழிகாட்டும் வகையில் 7.5சதவீத இட ஒதுக்கீட்டை நிறைவேற்றி இதன் மூலம் இன்றைக்கு 435 அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பை உருவாக்கிக் கொடுத்துள்ளார்

ஆனால் தற்போது திமுகஅரசு முன்னாள் நீதியரசர் ராஜன் தலைமையில் ஒரு குழு அமைத்தது அந்த குழுவோ நீட் தேர்வை பெரும்பாலானவர்கள் விரும்பவில்லை என்று கூறி உள்ளார்கள் நாங்களும் இதை வரவேற்கிறோம் ஆனால் இது அனைவருக்கும் முன்பே தெரியும் தெரியாது ரகசியத்தை கூறியுள்ளது போல் உள்ளது

தற்போது இந்தாண்டு நீட் தேர்வு தேதி வெளியாகி உள்ளது இதனால் மாணவர்கள் பெற்றோர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர் திமுகவின் 505 தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வை மாணவருக்கு ஏமாற்றத்தை முதல் பரிசாக வழங்கி உள்ளனர் அதேபோல் சுகாதார அமைச்சரும் நீட் தேர்வு நல்லது என்றும் மருத்துவ படிப்புக்கு பயன்பெறும் என்று நேரத்திற்கு தகுந்தார் போல் பேசுகிறார்

நம்பி ஓட்டு போட்டோம் இன்றைக்கு நடுத்தெருவில் நிற்கும் என்று மக்கள் சொல்கிறார்கள் மாணவர்களை ஏமாற்றியது போதும் என்று இன்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடியார் மாணவர் நலனுக்காக குரல் கொடுத்துள்ளார

கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக 505 தேர்தல் வாக்குறுதி அளித்தார் இதில் அனைத்து குடும்ப தலைவிகளுக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தார்கள் அதை நடைபெறும் நிதி நிலையில் அறிவிக்க வேண்டும் வாக்குறுதியை நிறைவேற்ற தவறினால் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட மகளிரணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

மாணவர்கள் வாங்கிய கல்விக்கடனை ரத்து செய்வோம் என்று திமுக தேர்தல் வாக்குறுதி கூறியது தற்போது மாணவர்கள் கூட்டுறவு வங்கிகளில் மற்றும் தேசிய வங்கிகளில் வாங்கிய 20,000 கோடி கடனை அரசு ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்

கடந்த சட்டமன்றத் தேர்தலில் 75 இடங்களில் நமது கூட்டணி வெற்றி பெற்றது 43 தொகுதி வெற்றி பெற்றால் நாம் ஆட்சியில் அமர்ந்திப்போம் 43 தொகுதிகளில் ஒரு லட்சத்து 98 ஆயிரம் வாக்குகள் பெற்று இருந்தால் மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்து ஹாட்ரிக் சாதனை படைத்து இருப்போம்

மேகதாது பிரச்சனையில் அரசு வீரவசனம் பேசாமல் கவனம் செலுத்த வேண்டும் அதிமுக ஆட்சி இருக்கும் பொழுது தொடர்ந்து எதிர்க்கப்பட்டு அணை கட்டப்படாமல் தடுக்கப்பட்டது மேகதாது அணை கட்டுவோம் என்று கர்நாடகா கூறுகிறது அப்படி கட்டினால் நமது நெற்களஞ்சியம் எல்லாம் பாலைவனம் போல் ஆகிவிடும்

அதேபோல் கர்நாடக அரசு ஒரு அணை கட்டி உள்ளது அதை கொரோனா காலத்தில் கட்டி முடிக்க பட்டதாக செய்தி வருகிறது இந்த அணை திமுக காங்கிரஸ் கூட்டணி அரசின் போது பூமி பூஜை போடப்பட்டு 80 சகவீத வேலைகள் முடிவடைந்து விட்டது ஆகவே மேகதாதுவில் தமிழர்களின் உரிமையை நிலைநாட்ட எந்த தியாகத்தையும் அரசு மேற்கொள்ள தயாராக இருக்க வேண்டும்

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்று கூறிவருகிறார் அப்படியானால் எம்.எல்.ஏ.விற்கு வேலைக்கு எதற்கு இதே முதலமைச்சர் சிறப்பு குறை தீர்க்கும் முகாமிற்கு வந்த 10 லட்சம் மனுக்களுக்கு எடப்பாடியார் தீர்வு கண்டுள்ளார் அதேபோல் கடந்த பத்தாண்டுகளில் ஒரு நிமிடம் கூட மின்வெட்டு இல்லை

முதியோர்ஓய்வூதியத் திட்டத்தின் மூலம் 35 லட்சம் நபர்ளுக்கு வழங்கப்பட்டது அதேபோல் சாலை வசதி குடிநீர் வசதி சுகாதார வசதி குடிமராமத்து திட்டம் என்று கடந்த நான்கு ஆண்டுகளில் 40 ஆண்டுகால வளர்ச்சியை தமிழகத்திற்கு எடப்பாடியார் உருவாக்கித் தந்தார் என்று பேசினார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe