வணிகப் புறக்கணிப்பு, மதரீதியான கருத்தா?! உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் புகாரளிக்க இமக., முடிவு!

உரத்த சிந்தனை சற்றுமுன் தமிழகம்
arjun sampath - 2026

வணிகப் புறக்கணிப்பு என்பது மத ரீதியான கருத்தா என்று கேட்டுள்ள இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் இது குறித்து உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் புகார் அளிக்க முடிவு செய்திருப்பதாகக் கூறினார்.

இது குறித்து அர்ஜுன் சம்பத் தெரிவித்த போது,

மதமாற்றத்துக்கு எதிராகப் பேசிய ஜிம் இராமலிங்கம் அண்மையில் படுகொலை செய்யப்பட்டார். அதைக் கண்டித்து இந்து இயக்கங்கள் நடத்திய ஜனநாயக அறப் போராட்டங்களுக்கு எதிராகவும், படுகொலைக்கு ஆதரவாகவும் செயல்பட்ட இஸ்லாமிய மத வெறியர்கள் நடத்தும் துணிக்கடைகளை புறக்கணிப்போம். இந்துக்களே விழித்துக் கொள்வீர்” என்று பேஸ்புக் சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு செய்ததாக, காவல்துறை ஆய்வாளர் ஒருவர், தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்வதும், அவரை ஜாமீனில் வெளிவர இயலாத பிரிவுகளில் கைது செய்து சிறையில் அடைப்பதும் அதிர்ச்சி அளிக்கிறது.

அந்த நபர் ஜாமீனில் வெளிவர முடியாத நிலையில் மதுரை உயர் நீதிமன்றத்தில் ஜாமீனில் வெளிவர, “தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் நடத்தும் அறக்கட்டளைக்கு ரூ.25 ஆயிரமும், கிருஸ்துவ ஆதரவற்றோர் அமைப்புக்கு ரூ 25 ஆயிரமும் வழங்க வேண்டும்” என உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் நிபந்தனை விதித்தார், என்று வெளியான செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

நீதித்துறையின் விசித்திரமான இந்த உத்தரவு இந்து தமிழர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. ஜிம் இராமலிங்கம் கொலை வழக்கில் கைது செய்யப் பட்டுள்ள அனைவரும் இஸ்லாமிய மத அடிப்படைவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள்! தற்பொழுது நீதிமன்றமும் இத்தகைய அமைப்புகளுக்கு நன்கொடை வழங்க உத்தரவு கொடுக்கிறது. தமிழக நீதிமன்றங்கள் இவ்வாறு செயல்படுவது சட்டவிரோதமாகும்!

இதுகுறித்து மேல்முறையீடு செய்ய வேண்டும். தமிழக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் இது குறித்து புகார் கொடுக்க இந்து மக்கள் கட்சி முடிவு செய்துள்ளது என்று கூறினார்.

செல்வக்குமாருக்கு இந்து மக்கள்கட்சி ஆதரவளிக்கும். நீங்களும் ரிச்சா பாரதியாக மாறுங்கள் நாங்கள் உங்களோடு இருக்கிறோம் என்று கூறியுள்ளார் அர்ஜுன் சம்பத்.

இதே போல், பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜாவும் தனது டிவிட்டர் பதிவில், நாகை மாவட்டம் மணல்மேடு செல்வக்குமார் தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு ஏற்புடையதல்ல. இதை நாம் சட்டப்படி எதிர்கொள்வோம். இதன் மேல் நடவடிக்கைகள் குறித்து அஸ்வத்தாமன் உள்ளிட்ட வழக்கறிஞர்களுடன் சட்ட ஆலோசனை துவங்கியுள்ளது. .. என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.