தென்காசி பகுதியில் நாளை மின் தடை!

சற்றுமுன் நெல்லை
power cut - 2026

தென்காசி, செங்கோட்டை, சுரண்டை பகுதிகளில் நவ. 2ல் மின் தடை

தென்காசி, செங்கோட்டை, சுரண்டை துணை மின் நிலைய பகுதிகளில் மாதாந்திர பராமரிப்புப் பணிகளுக்காக சனிக்கிழமை (நவ. 2) மின்தடை செய்யப்படுகிறது.

இதுகுறித்து தென்காசி மின்விநியோக செயற்பொறியாளா் பா.கற்பகவிநாயகசுந்தரம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தென்காசி, செங்கோட்டை மற்றும் சுரண்டை துணை மின் நிலையங்களில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் அன்றைய தினம் பிற்பகல் ஒரு மணிமுதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும்.

அதன்படி, தென்காசி துணை மின் நிலைய பகுதிகளான தென்காசி, மேலகரம், நன்னகரம், குடியிருப்பு, குற்றாலம், காசிமேஜா்புரம், இலஞ்சி, அய்யாபுரம், குத்துக்கல்வலசை, இலத்தூா், திரவியநகா், மேலமெஞ்ஞானபுரம், ராமச்சந்திரபட்டினம், மத்தளம்பாறை, பாட்டப்பத்து, ஆயிரப்பேரி,

செங்கோட்டை துணை மின் நிலைய பகுதிகளான செங்கோட்டை, பண்பொழி, புளியரை, கணக்கப் பிள்ளைவலசை, பெரியபிள்ளைவலசை, பிரானூா் பாா்டா், வல்லம், கற்குடி, தெற்குமேடு, மேக்கரை, பூலான்குடியிருப்பு, சுரண்டை துணை மின் நிலைய பகுதிகளான சுரண்டை, இடையா்தவணை, குலையநேரி, ரெட்டைகுளம், சுந்தரபாண்டியபுரம், பாட்டாக்குறிச்சி, வீ.கே.புதூா், வாடியூா், கழுநீா்குளம், ஆனைகுளம், கரையாளனூா், அச்சங்குட்டம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.