
இலக்கிய பேச்சாளரும் காங்கிரஸ் பிரமுகருமான நெல்லை கண்ணன், பழ.கருப்பையா வரிசையில் சேர்ந்துவிட்டார் என்றும், அவர் பிரதமர் மோடி குறித்து தரம் தாழ்ந்து பேசியதற்கு மன்னிப்பு கோர வேண்டும் என்றும் நெல்லை கண்ணனுக்கு இந்து மக்கள் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அக்கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் கூறியபோது…
பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களையும் ,மாண்புமிகு தமிழக அமைச்சர்களையும் தரம் தாழ்ந்து விமர்சனம் செய்தும் கெட்ட வார்த்தைகளால் மோசமான வார்த்தைகளால் திட்டியும் பேட்டி கொடுத்துள்ளார்!
நெல்லை கண்ணன் அவர் மன்னிப்பு கேட்கும் வரை இ. ம. க. தொண்டர்கள் தொடர் போராட்டம் நடத்துவார்கள்! இன்று இந்து மக்கள் கட்சியின் சார்பில் நெல்லை காவல் நிலையத்தில் நெல்லை கண்ணன் மீது புகார் கொடுக்கப்பட்டு புகார் மனு ரசீது பெறப்பட்டுள்ளது !
தமிழக அரசாங்கம் நெல்லை கண்ணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்! தமிழ் கடல் என்று நெல்லை கண்ணன் மீது மரியாதை கொண்டிருந்த எங்களுக்கு அவர் ஒரு சாக்கடை என்பது புரிகிறது !

பெருந்தலைவர் காமராஜரின் சீடர் என்று சொல்லிக்கொள்ளும் நெல்லை கண்ணன் தான் சார்ந்து இருக்கின்ற காங்கிரஸ் கட்சிக்கும் அவப்பெயரைத் தேடித் தந்துள்ளார்!சைவ சமயத்தை பின்பற்றுகிறேன் சைவ சமய உண்மைகளை பேசுகிறேன் என்று சொல்லும் நெல்லை கண்ணன் சைவ சமயத்திற்கும் அவமானத்தைத் தேடித் தந்துள்ளார்!
நெல்லை கண்ணன் தனது தரம் தாழ்ந்த பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் ! தமிழக அரசாங்கம் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்!
பழ கருப்பையா வரிசையில் இடம்பெற்றுள்ள நெல்லை கண்ணனை தமிழ்ச்சமூகம் இனி புறக்கணிக்கும் !
இந்து மக்கள் கட்சியின் சார்பில் நெல்லை கண்ணன் மன்னிப்பு கோரும் வரை ஜனநாயக அறப்போராட்டங்கள் நடைபெறும்!



