பரிபூரணம் அடைந்தார் ஸ்ரீலஸ்ரீ தருமபுரம் ஆதீனம்!

ஆன்மிகச் செய்திகள் சற்றுமுன் தமிழகம் திருச்சி லைஃப் ஸ்டைல்
darumapuram atheenam - 2026

இந்தியாவின் பழைமையான சைவ ஆதீனங்களின் ஒன்றான தருமபுரம் ஆதீனம் 26ஆவது குரு மகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் இன்று மதியம் 2.40 மணிக்கு தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் பரிபூரணம் அடைந்தார் (இயற்கை எய்தினார்).

26thguru - 2026
தருமபுரம் ஆதீனம் 26வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசார்ய சுவாமிகள்

நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்து உள்ளது தருமபுரம் இங்கே அமைந்துள்ள மிகப் பழைமை வாய்ந்த ஆதீன மடத்தின் மடாதிபதி 26-வது குருமகா சந்நிதானம் சண்முக தேசிக ஞானசம்பந்த பராமாசாரிய சுவாமிகள் புதன்கிழமை இன்று பிற்பகல் தமது 93 ஆவது வயதில் விதேக முக்தி அடைந்தார்.

சில தினங்களாகவே வயது மூப்பின் காரணமாக உடல்நலக்குறைவு கண்டு, தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று பிற்பகல் அவர் பரிபூரணம் அடைந்தார்.

26th darumai athinam - 2026
தருமபுரம் ஆதீனம் 26வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசார்ய சுவாமிகள்

இவர், கடந்த 1926ம் ஆண்டு கடலூர் மாவட்டம் சிறுகாட்டூரில் பிறந்தார். விருத்தாசலம் தேவாரப் பாடசாலையில் படித்தார். தருமபுரத்தில் வித்வான் பட்டம் பெற்றார்!

இவர், கௌரவ பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார். தேவஸ்தான பொறுப்பில் அதிக நாட்கள் பணியாற்றிய இவர், கட்டளைத் தம்பிரான் சுவாமியாக சென்னை சமய பிரச்சார நிலையத்தில் பணியாற்றி வந்தார்.

1971ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தருமபுர ஆதீனத்தின் 26வது மடாதிபதியாக பதவியேற்றார். சுமார் அரை நூற்றாண்டுகள் – 49 ஆண்டுகள் மடாதிபதியாக பதவி வகித்தவர்.

darumai athinam shanmuga deiska - 2026
DHARSHAN OF 26TH GURU MAHA SANNITHANAM OF DHARUMAI ADHEENAMSRI-LA-SRI SHANMUGA DESIGA GNANASAMBANDHA PARAMACHARYA SWAMIGAL

தருமபுரம் ஆதீனத்துக்கு உட்பட்டு, திருக்கடையூர், வைத்தீஸ்வரன்கோயில் உள்ளிட்ட புகழ்பெற்ற 27 ஆலயங்கள் தமிழகம் மட்டுமின்றி, காசி உள்ளிட்ட இடங்களிலும் உள்ளன. காசியில் தருமபுரம் ஆதீன மடம் செய்து வரும் பணிகள் அளப்பரியது. கல்வி, சமுதாயச் சேவைகளிலும் தருமபுரம் ஆதீன மடம் செயலாற்றி வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.