அவரு கைலாஷ் நாட்ல இல்ல… நம்ம நாட்டு கைலாஷ்ல இருக்காராம்… நித்தியானந்தா!

அடடே... அப்படியா? உரத்த சிந்தனை சற்றுமுன் சென்னை
nithyanatha 2 - 2026

தன்னோட கைலாஷ் நாட்டுக்கு தப்பி ஓடி விட்டார்… என்று ஊடகங்களில் கூறப்பட்ட நித்யானந்தா, தற்போது நம்முடைய கைலாஷ்ஷில் தான் உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளன.

இமயமலை சாரலில் நித்தியானந்தா பதுங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இமயமலை பகுதியில் பேசிய நித்தியின் வீடியோக்கள், பிடதி ஆசிரமத்தில் இருந்து பதிவேற்றம் செய்யப் படுவதாகவும் தகவல் தெரியவந்துள்ளது.

நித்தியானந்தாவின் இருப்பிடம் தெரிய வந்துள்ளதால், அவரை விசாரணைக்கு உட்படுத்த போலீசார் திட்டமிட்டுள்ளதாகக் கூறப் படுகிறது.

முன்னதாக, இந்து நாடு அமைக்கும் தீவிர முயற்சியில் நித்தியானந்தா இருந்ததாகவும், இருக்கும் நாட்டை இந்து நாடாக மாற்ற தம்மால் முடியாது என்பதால், உலகின் ஒரே இந்து நாடாக தாமே ஒரு நாட்டை உருவாக்கும் முயற்சியில் நித்தியானந்தா ஈடுபட்டதாகவும் கூறப் படுகிறது.

இதை அடுத்து அவர், தென் அமெரிக்கா அருகே தனித்தீவு வாங்கி குடிபெயர்கிறார் என்று கூறப்பட்ட நிலையில், திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. நித்தியானந்தாவின் நடவடிக்கைகளை உளவு அமைப்புகள் தொடர்ந்து கண்காணிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமது தனித் தீவுக்கு கைலாசா என பெயரிட்டு, அங்கே குடியுரிமை பெற இணையத்தில் வேண்டுகோள் விடுத்து வருகிறார் நித்தியானந்தா. கைலாசா தீவுக்கு தனிக்கொடி, சின்னங்கள், அமைச்சர் இலாகாக்களையும் அறிவித்திருந்தார் நித்தியானந்தா.

இந்த நிலையில், நம்நாட்டில் உள்ள கைலாயத்திலேயே அவர் இப்போதும் இருப்பதாகக் கூறப் படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.