December 6, 2025, 5:25 AM
24.9 C
Chennai

சூப்பர் நோவா சவுண்ட்! நாசா வெளியிட்ட வீடியோ!

nasa-1
nasa-1

நேஷனல் ஏரோநாட்டிக்ஸ் மற்றும் விண்வெளி நிர்வாக ஹப்பிளின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு மெய்சிலிர்க்க வைக்கும் வீடியோவை நாசா வெளியிடப்பட்டுள்ளது.

வீடியோவில், ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி மற்றும் நாசாவின் சந்திரா எக்ஸ்ரே ஆய்வகம் மேற்கொண்ட கண்காணிப்புகளைப் பயன்படுத்தி பதிவு செய்யப்பட்ட “சூப்பர்நோவா 1987A” இன் சொனிஃபிகேஷனை ஒலியை அந்த வீடியோவில் கேட்கலாம். இது பால்வெளி மண்டலத்தில் உள்ள சிறிய செயற்கைக்கோள் அளவிலான விண்மீன் ஆகும். பெரிய மாகெல்லானிக் கிளவுட்டில் இது டைப் II வகை சூப்பர்நோவா ஆகும்.

ஒரு சூப்பர்நோவா என்பது ஒரு நட்சத்திரத்தின் வெடிப்பு என கூறப்படுகிறது. இது விண்வெளியில் நடக்கும் மிகப்பெரிய வெடிப்பு ஆகும்.

சூப்பர்நோவாக்கள் பெரும்பாலும் மற்ற விண்மீன் திரள்களில் காணப்படுகின்றன. ஆனால் சூப்பர்நோவாக்களை நம் சொந்த பால்வெளி மண்டலத்தில் பார்ப்பது கடினம், ஏனென்றால் தூசி நம் பார்வையைத் மறைக்கும் என்பதால் காணமுடியாது. 1604 ஆம் ஆண்டில், ஜோகன்னஸ் கெப்லர் பால்வெளி மண்டலத்தில் கடைசியாக கவனிக்கப்பட்ட சூப்பர்நோவாவைக் கண்டுபிடித்தார். இதனை நாசாவின் சந்திரா தொலைநோக்கி பதிவு செய்தது.

தற்போது நாசா வெளியிட்டுள்ள வீடியோவில், சூப்பர்நோவா அதிர்ச்சி அலை அதன் வாயுவின் அடர்த்தியான வளையத்தின் வழியாக செல்லும் போது பிரகாசமாக ஒளிருவதை காணலாம். இந்த பிரகாசிக்கும் வளையம் சூப்பர்நோவாவுக்குச் செல்வதற்கு முன்பு நட்சத்திரத்தால் வெளியேற்றப்பட்டது என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். அற்புதமான முறையில் சிஸ்டம்ஸ் சவுண்ட் செய்யப்பட்ட சூப்பர்நோவா சொனிஃபிகேஷனில், வளையம் பிரகாசிக்கும் போது சத்தமாகவும் அதிக குறிப்புகள் கொண்ட ஒலியுடனும் இருக்கும்படி தொகுக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ 1999 முதல் 2013 வரை அதிநவீன கருவிகளால் மேற்கொள்ளப்பட்ட அப்சர்வேஷன்கள் மூலம் தொகுக்கப்பட்டுள்ளது என நாசா தெரிவித்துள்ளது. இந்த அமைதியான இசை பல விண்வெளி ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

சூப்பர்நோவா 1987A “SN 1987A” என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒரு டைப் II சூப்பர்நோவா ஆகும். இது பூமியிலிருந்து 1,68,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் நிகழ்ந்தது. கெப்லரின் சூப்பர்நோவாவிற்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட மிக நெருக்கமான சூப்பர்நோவா இதுவாகும். இந்த சூப்பர்நோவாவிலிருந்து வெளிச்சம் 1987ம் ஆண்டு பிப்ரவரி 23ம் தேதி அன்று பூமியை அடைந்தது என்றும் கூறப்படுகிறது.

முன்னதாக, நாசா ஹப்பிள் பல வான பொருட்களின் சொனிபிகேஷனை வெளியிட்டது. கடந்த ஆண்டு அக்டோபரில், ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கியால் கைப்பற்றப்பட்ட ஒரு படத்தின் ஒலியைக் கேட்கக்கூடிய ஒரு வீடியோவை நாசா வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. முன்னதாக ஜனவரி மாதம், நாசா ஹப்பிள் புல்லட் கிளஸ்டரின் சொனிஃபிகேஷனுடன் ஒரு வீடியோவைப் பகிர்ந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories