கன்னியாகுமரியில் கொரோனா கோரத்தாண்டவம்! தபால் நிலையம் அடைப்பு!

சற்றுமுன் தமிழகம்
post office
post office

கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 1400 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாகர்கோவிலில் இன்று ஒரே வீட்டில் ஐந்து பேருக்கு கொரோனா. தலைமை தபால் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.

மேலும் மாவட்டதில் கொரோனா தொற்று நாள் ஒன்றுக்கு 300ஐ கடந்து வருவதால் மக்கள் அச்சம்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரானா தொட்டால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தற்போது வரை நாகர்கோவில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, கோவிட் சிறப்பு சிகிச்சை மையங்கள், தனியார் மருத்துவமனைகள் போன்றவற்றில் 1400 க்கு மேற்பட்ட நோயாளிகள் உள்ளனர்.

இந்நிலையில் இன்று நாகர்கோவிலில் உள்ள கன்னியாகுமரி மாவட்ட தலைமை தபால் நிலையத்தில் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று காரணமாக தபால் நிலையம் முழுவதும் கிருமிநாசினிகள் அடிக்கப்பட்டு தற்காலிகமாக மூடப்பட்டது.

இதேபோன்று நாகர்கோவில் ரயில்வே காலனி பகுதியில் ஒரே வீட்டில் ஐந்து பேருக்கு கொரானா தோற்று ஏற்பட்டதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட வீட்டிற்குச் சென்று அங்கு இருந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலமாக கொரோனா சிகிச்சை மையங்களுக்கு அனுப்பி வைத்தனர்.

அதை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் இந்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

சராசரியாக தினசரி 50,100,150, என கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் என கண்டறியப்பட்ட நிலையில் தற்போது தினசரி 300க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது மாவட்டத்தில் பொதுமக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சுகாதார பணியாளர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.