இசைக் கலைஞர் மரணம்! பிரதமர் இரங்கல்!

இந்தியா சற்றுமுன்
Rajan mishra
Rajan mishra

பிரபல கிளாசிக்கல் பாடகர் ராஜன் மிஸ்ரா(70) காலமானார். கொரோனாவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு இதயக்கோளாறு காரணமாக உயிரிழந்தார்.

கொரோனா காரணமாக ஆபத்தான நிலையில் நேற்று அவர் தில்லியில் உள்ள செயிண்ட் ஸ்டீபன்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இதய பிரச்சனைகள் இருந்ததால் கடும் அவதிக்கு உள்ளானார். இதில் அவர் இதயக்கோளாறு காரணமாக உயிரிழந்துவிட்டார் என்று மருத்துவமனை தெரிவித்திருக்கிறது.

1978ம் ஆண்டு இலங்கையில் தனது முதல் நிகழ்ச்சியை தொடங்கினார். பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து, அமெரிக்கா, நெதர்லாந்து, இங்கிலாந்து, சிங்கப்பூர், கத்தார், பங்களாதேஷ், யு.எஸ்.எஸ்.ஆர்.

Rajan mishra 1
Rajan mishra 1

நாடுகளில் தனது இசை நிகழ்ச்சியை நடத்தியவர் ராஜன் மிஸ்ரா. 2007ம் ஆண்டும் மத்திய அரசு இவருக்கு ‘பத்மபூஷண்’விருது வழங்கி கவுரவித்தது.

ராஜன் மிஸ்ராவின் மரணத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி,”கிளாசிக்கல் பாடும் உலகில் தனது அழியாத அடையாளத்தை விட்டு வெளியேறிய பண்டிட் ராஜன் மிஸ்ராவின் சோகம் மிகவும் வருத்தமாக உள்ளது” என்று இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

மேலும், ”பனாரஸ் கரானாவுடன் மிஸ்ராவின் தொடர்பு கலை மற்றும் இசை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். இந்த நேரத்தில் அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுடன் எனது வருத்தத்தை பகிர்ந்துகொள்கிறேன்”என்று தெரிவித்துள்ளார்.

பாரதீய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, ”பிரபல கிளாசிக்கல் பாடகர் பண்டிட் ராஜன் மிஸ்ராவின் மறைவு பற்றிய செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது.

ராஜன் மிஸ்ரா காலமானது கலை மற்றும் இசை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். எனது இரங்கல். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்”என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.