இவனுங்களுக்கு இதே வேலையா போச்சு… சீ… எஸ்.ஏ.சந்திரசேகர்! ஏம்டா இப்படி இந்துப் பெண்களையே குறி வைக்கிறீங்க?!

அடடே... அப்படியா? சற்றுமுன் சினி நியூஸ் சினிமா புகார் பெட்டி லைஃப் ஸ்டைல்
sac - 2026

சினிமா டைரக்டர் எஸ்.ஏ. சந்திரசேகர், கிறிஸ்துவரான தாம் எப்படி திட்டமிட்டு இந்து முதலியார் பெண்ணான ஷோபாவை காதலித்தார் என்பதை சாதியை முன்னிறுத்திப் பேசி பலரையும் நெளிய வைத்தார்.

நடிகர் ஜெயம்ரவியின் பெற்றோர் எழுதிய நூல் வெளியீட்டு விழா ஒன்றில் பங்கேற்றார் நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ சந்திர சேகர்! இவர் பேசும்போது, கிறிஸ்தவரான தான் முதலியார் சாதியைச் சேர்ந்த ஷோபாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வை வெளிப்படையாகத் தெரிவித்தார்.

சென்னை தியாகராய நகர் வாணி மஹாலில் நடிகர் ஜெயம் ரவியின் தந்தை எடிட்டர்மோகன், தாய் வரலெட்சுமி ஆகியோர் எழுதிய நூல்களின் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இதில் நடிகர் பிரபு, நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நூல்களை வெளியிட்டனர். இந்த விழாவில் பேசிய எஸ்.ஏ.சந்திரசேகர், தான் ஆரம்பக் காலத்தில் டிக்கெட் எடுக்காமல் சென்னைக்கு ரயில் ஏறி வந்ததாகத் தெரிவித்தார். அதாவது தாமும் கருணாநிதி பாணியில் கள்ள ரயில் ஏறி வந்ததாகக் கருத்து படக் கூறினார்.

கள்ள ரயில் ஏறி வந்த கருணாநிதி தாமே முதலமைச்சர் ஆனார். தன் மகனுக்கும் முதல்வர் நாற்காலிக்கு வழி செய்து கொடுத்தார். அது போல், கள்ள ரயில் ஏறி வந்த தாமக்கோ, அந்த முதல்வர் நாற்காலி கிடைக்காது போனாலும், தன் மகனுக்கு திட்டமிட்ட படி கிடைப்பதற்கு வழி செய்வதாக சொல்லாமல் சொன்னாரோ என்னவோ!

அடுத்து, சென்னைக்கு வந்த தமக்கு இருப்பதற்கு இடம் கொடுத்து ஆதரவு அளித்த நீலகண்டன் என்பவரது மகளான ஷோபாவையே தாம் காதலித்து திருமணம் செய்து கொண்டதாகக் கூறினார்.

தமிழில் உண்ட வீட்டுக்கு ரெண்டகம் விளைவிப்பது என்று சொல்வது போல், தமக்கு இடம் கொடுத்து ஆதரித்து உபசரித்த வீட்டின் மகளையே காதலித்து சோறு போட்ட இடத்துக்கு துரோகம் விளைவித்ததை பெருமையாகவும் பெரிமிதத்துடனும் மேடையில் பகிர்ந்து கொண்டார் எஸ்.ஏ.சந்திரசேகர்.

மேலும், தாம் ஒரு கிறிஸ்தவர் என்றும் தனது மனைவி முதலியார் சமூகத்தைச் சேர்த்தவர் என்றும், தாம் அப்போதே காதல் கல்யாணம் மூலம் மதமாற்றத்தை வாழ்க்கையில் நடத்தி விட்டதாகவும், அதன் பின்னர் தமது திரைப்படங்களில் அதுபோன்ற காட்சிகளை வைத்து மதமாற்றத்துக்குத் துணை போனதையும் பொடி வைத்துப் பேசினார் எஸ்.ஏ.சந்திரசேகர்.

இது மட்டுமின்றி, ஜெயம் ரவியின் தந்தை மோகன் இஸ்லாமியர் என்றும், அவரது தாய் வரலட்சுமி இந்து- பிராமணர் சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றும், இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிவித்தார். அதன் மூலம் மற்ற மதத்தவர்களின் குறி, பிராமண, முதலியார், பிள்ளைமார் பெண்கள் தான் என்பதை சூசகமாகத் தெரிவித்தார் எஸ்.ஏ.சந்திரசேகர்.

தன் மகன் விஜய்யை பலரது கால் கைகளில் விழுந்து லயோலா கல்லூரியில் விஸ்காம் படிக்க சேர்த்து விட்டதாகவும், ஆனால் அவரோ ஒரு வருடத்திலேயே படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, நடிக்க வந்துவிட்டதாகவும் தெரிவித்தார்.

எஸ்.ஏ.சந்திரசேகரின் ஜாதி, மதத்தைக் குறிப்பிட்டு உள்நோக்கத்துடன் பேசிய பேச்சு இப்போது பலரது முகச்சுளிப்புக்கும் உள்ளாகியிருக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.