110 எம்எல்ஏக்கள் கூவத்தூர் கோல்டன் பே ரிசார்ட்டிலும் 10 எம்எல்ஏக்கள் பூந்தண்டலத்திலுள்ள ரீட்ரென்ட் ஹோட்டலிலும்தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
எம்எல்ஏக்கள் கொண்டு செல்லப்பட்ட முதல் நாள் இரவு பலத்த பாதுகாப்புடன் யாரும் அருகில் வராதபடி பார்த்துக்கொள்ளப் பட்டதால் ஆட்டம் பாட்டம் களைகட்டியது.
அப்போது டான்ஸ் ஆடி மிம்க்ரி செய்து கலக்கியவர் நடிகரும் திருவாடனை தொகுதி எம்எல்ஏவான கருணாஸ்.
சின்னம்மா புகழ் பாடி குட்டி கரணம் அடித்த இவர் தற்போது "ஏண்டா இந்த கும்பல்ல வந்து சிக்கினோம்" என கடுப்பில் இருக்கிறாராம்.
5 நாட்களாக ஷேவிங் செய்யாத முகத்துடன் காணப்படும் கருணாஸ் 2வது நாள் வழக்கம் போல் காணப்பட்டாராம். 3 வது நாள் அனைவருக்கும் வந்த வெறுமை அவரையும் தொற்றிக் கொண்டதோடு முக்கியமான குழு ஆலோசனைகளில் இவரை வலுக்கட்டயமாக விலக்கி வைத்தார்களாம்.
தனக்கு மான பிரச்சனை ஏற்பட்டுவிட்டது என கருணாஸ் மனம் நொந்து கொண்டதோடு 5 நாட்களாக ஒரே இடத்தில் அடைபட்டு தம்மால் இருக்க முடியாது என குமுறுகிறாராம்.
ஆனால் அடுத்த உத்தரவு வரும் வரை இங்கேதான் தங்கி இருக்க வேண்டும் என சிலர் கடுமையான வார்த்தைகளால் சொல்வதால் மிகுந்த எரிச்சலில் இருக்கிறாராம் கருணாஸ்.
அதை பற்றி சசிகலா தரப்பும் பெரிதாக கவலைபடுவதாக தெரியவில்லையாம்.
விட்டால் போதும் ஓடி விடலாம் என்ற நிலையில் சில எம்எல்ஏக்கல் உள்ளதாக கூறப்பட்டது அந்த லிஸ்டில் தற்போது கருணாசும் உள்ளாராம்.
3வது நாளாக கூவத்தூர் ரிசார்ட்டுக்கு சென்றுள்ள சசிகலா இன்று அங்கேயே இரவு தங்குகிறார்.
கருணாஸ் மனக்குறையை அறிந்து சரிகட்டுவார்களா? அல்லது கோட்டை விட்டுவிடுவார்களா? 
ALSO READ:  உங்களால் இந்த தேசத்துக்கு என்ன ஆதாயம் ஏற்படும் என்பதை சிந்தியுங்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending