பம்பையில் கட்டுக்கடங்காத கூட்டம் : பல மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள்

ஆன்மிகச் செய்திகள் சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
IMG 20191225 WA0013 - 2026

சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்; கடும் போக்குவரத்து நெரிசல்

சபரிமலையில் நாளை மறுதினம் மண்டலபூஜை நடைபெற உள்ளதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இதனால் அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

சுமார் 40 கி.மீ. தூரத்திற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் மாற்று வழியில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன.

சபரிமலை ஐயப்பன் கோயிலில், இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை வரும் 27 ஆம் தேதி நடைபெற உள்ளதால் இந்தியா முழுவதில் இருந்தும் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால், பக்தர்கள் வருகை கட்டுக்கடங்காமல் உள்ளது.

இதனால், நிலக்கல்லில் வாகனங்களை நிறுத்துவதற்கு கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

பம்பையில் இருந்து மலையேறும் பக்தர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு ஒவ்வொரு பகுதியாக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

கடந்த மூன்று ஆண்டுகள் இல்லாத அளவிற்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருவதால், ஐயப்பனை தரிசிக்க 18 மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.