வைரமுத்துவுக்கு டாக்டர் பட்டம்! மத்திய அமைச்சருக்கு எதிராக கொதித்தெழும் இந்து இயக்கங்கள்!

சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்
vairamuthu doctor award - 2026

ஆண்டாளை இழிவுபடுத்திய வைரமுத்துவுக்கு, பச்சமுத்துவின் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் சார்பில் “டாக்டர்” பட்டம் வழங்கப்படுகிறது. 28-ஆம் தேதி காலை 11 மணிக்கு இராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பட்டத்தை வழங்குகிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்து இயக்கங்கள் போராட முடிவு செய்துள்ளன.

ஹிந்துக்களின் புனித தெய்வமாகவும் ஆன்மிகத் தமிழ் பரப்பிய ஆழ்வார்களில் ஒரே ஒரு பெண் ஆழ்வாரான தெய்வத் தமிழ்ப் பெண் ஆண்டாளை இழிவுபடுத்தி கட்டுரை வரைந்து உரையாற்றிய சினிமா பாடலாசிரியர் வைரமுத்துவுக்கு, நாடாளுமன்ற உறுப்பினரான பச்சமுத்துவுக்கு சொந்தமான எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் சார்பில் “டாக்டர்” பட்டம் வழங்கப்படுகிறது.

வரும் 28-ஆம் தேதி காலை 11 மணிக்கு பாஜக.,வைச் சேர்ந்த ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்தப் பட்டத்தை வழங்குகிறார்.

இது குறித்த அழைப்பிதழ் வெளியானதும் சமூகத் தளங்களில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. இந்து இயக்கங்களைச் சார்ந்தவர்களும், பாஜக.,வின் அடிமட்டத் தொண்டர்களும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.

முன்னர், வைரமுத்துவுக்கு எதிராக பாஜக., தொண்டர்கள்தான் போராட்டங்களை நடத்தினர். இந்து இயக்கங்களுடன் சேர்ந்து, பாஜக.,வினரும் வைரமுத்துவை கண்டித்து போராட்டங்கள் நடத்திக் கொண்டிருந்த வேளையில், பாஜக., தலைவர்கள் சிலரே வைரமுத்துவுடன் மேடையைப் பகிர்ந்து கொண்டு, தொண்டர்களுக்கும் தொண்டர்களின் உணர்வுகளுக்கும் தலைவர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று காட்டினர்.

அது பாஜக., தொண்டர்களை பெரிதும் உசுப்பேற்றியுள்ளது.

#metoo இயக்கத்தின் போது, சினிமா பாடலாசிரியர் வைரமுத்து மீது தனது பாலியல் ரீதியான குற்றச்சாட்டுகளை முன்வைத்த பாடகி சின்மயி, தனது டிவிட்டர் பதிவில் ராஜ்நாத் சிங்குக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே வைரமுத்துவுக்கு ஆதரவாக, தமிழகத்தில் பாஜக., தலைவர்கள் சிலர் மத்திய அரசுக்குப் பாலமாக இருந்து செயல்படுவதும், வட மாநில எம்.பி.யான தருண் விஜய், திருவள்ளுவர் மற்றும் திருக்குறளின் பெயரைச் சொல்லி, வைரமுத்துவுக்கு துதி பாடுவதும் பாஜக., அடிமட்டத் தொண்டர்களை உசுப்பேற்றியிருந்தது.. இந்நிலையில், வைரமுத்துவுக்காக ‘தரகர்’ வேலை பார்க்கும் பாஜக., தமிழகத் தலைவர்களை தொண்டர்களே தங்களது சமூக வலைத்தளப் பக்கங்களில் விமர்சித்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.