
கிரகண காலத்தில் சில நிகழ்வுகள் நம்மை ஆச்சரியப் படுத்தும் விதமாய் அமைந்திருக்கும். அப்படி ஒன்றுதான் உலக்கை நெட்டுக்குத்தாக நின்ற அதிசயமும்!
கிரகண காலத்தில், அது சந்திர கிரகணமாக இருந்தாலும் சரி.. சூரிய கிரகணமாக இருந்தாலும் சரி… அப்போது பூமி, சூரியன், சந்திரன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் அமைந்திருக்கும்.
சூரியனைச் சுற்றி வரும் பூமியும், பூமியைச் சுற்றி வரும் சந்திரனும் ஒரு குறிப்பிட்ட கால அளவில் ஒரே நேர்கோட்டில் அமையும். முழுநிலவு தெரியும் ஒரு பௌர்ணமி நாளில், சூரியனின் ஒளி பூமியால் மறைக்கப் பட்டு முழுச் சந்திரனில் விழுந்து, சந்திரனின் ஒளியை மறைப்பது சந்திர கிரகணம் என்றும், அமாவாசை நாளில் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் வந்து சூரியனை மறைப்பது சூரிய கிரகணம் என்றும் பாரதீய வானியல் சாத்திரம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கும் முன்னால் சொல்லி வைத்தது.
இவ்வாறு பூமியின் ஈர்ப்பு சக்தியைக் காட்டிலும், ஏதோ ஒரு விதத்தில் சந்திரன் மற்றும் சூரியனின் சக்தி சூட்சுமமான விளைவை ஏற்படுத்துகிறது. அதனால் தான் கிரகண காலத்தில் மனித உடலில் நுட்பமான மாற்றங்கள் ஏற்படக் கூடும் என்று கூறி, அந்த நேரத்தில் உணவைத் தவிர்க்கச் சொன்னார்கள்.
அது போல், புவி ஈர்ப்பு விசை கடந்து, மர உலக்கை நட்டமாய் எந்தப் பிடிப்பும் இன்றி நிற்பது அதிசயமாகக் கருதப் படுகிறது. அது குறித்த காணொளி…