மார்கழி மாச மகிமைக் கோலம்… கருணா, சுடாலின், கனிமொழி வீடுகளில் கன ஜோர்! பாதை திரும்பிய பகுத்தறிவு!

உரத்த சிந்தனை சற்றுமுன் சென்னை லைஃப் ஸ்டைல்
kanimozhi house - 2026

தி.மு.க., தலைவர் சுடாலின், கனிமொழி, மறைந்த முன்னாள் திமுக., தலைவர் கருணாநிதி ஆகியோரின் வீட்டு வாசல்களில் மார்கழி மாதத்தில் போடப்படும் கோலங்கள் வரையப் பட்டு, அதற்கு முன் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான வாசகங்களை சிறிதாகப் பதிவு செய்து, வேண்டாம் என்று எழுதப் பட்டிருந்தது. இதனைக் கண்டு, பாதை திரும்பிவிட்டார்களா இந்தப் பகுத்தறிவு வாதிகள் என்று சமூகத் தளங்களில் கருத்து மழை பொழிந்து வருகிறார்கள் பலர்.

சென்னை பெசன்ட்நகரில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கல்லூரிப் பெண்கள் போர்வையில் சிலர் கோலமிட்டனர். இதனையடுத்து அவ்வாறு கோலமிட்டு வாசகங்களை அத்துமீறி எழுதிய 6 பெண்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப் பட்டனர். இதற்கு மு.க.சுடாலின் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள சுடாலின் வீடு, கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி வீடு, சி.ஐ.டி., காலனியில் உள்ள கனிமொழி வீடு என அவர்களின் வீட்டு வாசல்களின் முன்னர், மார்கழி மாதத்தில் இந்துக்கள் மத நம்பிக்கையுடன் போடும் கோலங்களை வரைந்து, அருகே வேண்டாம் CAA, NRC என்று எழுதி, கோலத்தின் அருகில் சில பூக்களையும் வைத்துள்ளனர்.

kolam protest - 2026

இது குறித்து கருத்து தெரிவித்த திமுக.,வினர் சிலர், பெசன்ட்நகரில் கோலம் போட்ட பெண்களைக் கைது செய்தது போல், ஸ்டாலின், கனிமொழி ஆகியோரைக் கைது செய்யுங்கள் பார்க்கலாம் என்று சவால் விட்டுள்ளனர்.

ஆனால் இவர்களின் இந்தச் செயலை வேறு விதமாக அணுகியுள்ளது பாஜக.,! இதுவரை பகுத்தறிவு பேசியவர்கள், இந்துக்களின் புனித மாதமான மார்கழியில், இந்துக்கள் மத நம்பிக்கையுடன் போடும் கோலங்களை தங்கள் வீட்டின் முன், ஏதோ குடியுரிமை சட்டத்துக்கு எதிராக செயல்படுவது போல் காட்டிக் கொண்டு, தங்களின் நலன் கருதி போட்டுக் கொண்டிருக்கின்றனர் என்று கூறுகின்றனர்.

ஸ்டாலின் வீட்டில் கோலம் போட்டது தொடர்பாக பாஜக., பிரமுகர் நாராயணன் திருப்பதி வெளியிட்டிருக்கும் கருத்தில், ஜனநாயகத்தில் யாரும் தங்களின் எதிர்ப்பை காட்டலாம். இது தவறு அல்ல. நாத்திகம் பேசும் நபர்கள் கோலம் போடுவது வரவவேற்கத்தக்கது என்று தெரிவித்துள்ளார்.

மார்கழி மாதங்களில் வீட்டு முன்பு கோலமிட்டால் மகாலட்சுமி வீடு தேடி வருவாள் என்பது நம்பிக்கை. இதனால் பெரும்பாலானோர் மார்கழியில் கோலமிடுகின்றனர்.

பகுத்தறிவு பகலவனின் வீட்டில் கோலம் போட வைத்தாகி விட்டது. தமிழரின் கலாச்சாரத்திற்கு திரும்புகிறது திராவிட பெரியார் மண் என்பதே சிறந்த விசயம்.

இது அக்மார்க் இந்து வீடு என்பதைக் காட்டுகிறது மறைந்த முதல்வர் #கருணாநிதி அவர்களின் கோபாலபுரம் இல்லம்.
எங்கே காவி வெள்ளை பட்டை அடித்தால் விமர்சிப்பார்களோ? என டைல்ஸ் பதித்து , இது இந்து வீடு என சொல்லி இருக்கிறார்.
சனாதனத்தை காக்கும் #கருணாநிதி
நன்றி ஸ்டாலின் அவர்களே!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.