பேஸ்புக் சமூக வலைத்தளத்தை உருவாக்கியவர் ஷூக்கர் பெர்க். 12 ஆண்டுகளுக்கு முன்பு அவர், அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார். சமூக வலைத்தளத்தை தொடங்கிய அவரால் படிப்பை தொடர முடியவில்லை. எனவே, படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு வெளியே வந்து விட்டார். அவர், தொழில் தொடங்கி வெற்றிகரமான நபராக மாறி விட்டாலும் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற முடியாமல் போன ஏக்கம் அவருக்கு இருந்து வந்தது. இந்த நிலையில் அவருடைய தொழில் சாதனைக்காக ஹார்வர்டு பல்கலைக்கழகம் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க முடிவு செய்துள்ளது. அது மட்டுமல்லாமல் அந்த பட்டமளிப்பு விழாவில் அவரை சிறப்பு விருந்தினராக அழைத்து பட்டமளிப்பு உரை நிகழ்த்தும் கவுரவத்தையும் அளித்துள்ளனர். எந்த பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற முடியாமல் போனதோ அதே பல்கலைக்கழகம் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் அளிப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
ALSO READ:  விநாயகர் சதுர்த்தி நேரத்தில் இடைத்தேர்தல்; மாற்றி அறிவிக்க இந்து முன்னணி கோரிக்கை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending