இந்த மசோதா மூலம் மகப்பேறு கால பெண்கள் விடுப்பு 12 வாரத்தில் இருந்து 24 வாரங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளை தத்தெடுப்போருக்கு 2 வாரம் மகப்பேறு கால விடுப்பாக வழங்கப்படும்.
*கட்டாய தேர்ச்சி முறையில் மாற்றம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.*
6,7ம் வகுப்பில் தேர்ச்சி பெறாவிட்டால் மறுவாய்ப்பு அளிப்பது குறித்து பரிந்துரை செய்யப்படும் என்றும்
மறுவாய்ப்பு தேர்வில் தேர்ச்சி பெறுபவரே அடுத்த வகுப்புக்கு செல்ல முடியும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5ம் வகுப்புக்கான தேர்வு முறையை அந்தந்த மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கட்டாய தேர்ச்சி முறையில் மாற்றம் வேண்டும் என 23 மாநிலங்கள் கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
*வெளியுறவு செயலர் வந்து உறுதி அளித்தால் தான் மீனவர் உடலை வாங்குவோம்*
ராமேஸ்வரம் மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு நியாயம் கேட்டு தங்கச்சிமடத்தில் நடக்கும் போராட்டம் தொடர்கிறது.
கோட்டாட்சியர் – மீனவர்கள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படவில்லை.
வெளியுறவு செயலர் வந்து உறுதி அளித்தால் தான் மீனவர் உடலை வாங்குவோம் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
*தமிழகத்தில்1064 பெண்கள் கடத்தல்: மத்திய அரசு தகவல்*
இந்தியாவில் 2016ல் 19,000க்கும் அதிகமான பெண்கள் கடத்தப்பட்டுள்ளனர் என்று மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது.இதில், தமிழகத்தில் மட்டும் 1064 பேர் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
*5 மாநில தேர்தல்: ரூ.87 கோடி மதிப்புள்ள மதுபானங்கள் பறிமுதல்*
உ.பி, பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட், மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் பிப்ரவரி 4ல் தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது.இந்நிலையில், 6,264 கிலோ போதைப்பொருள் ,37 லட்சத்து 26 ஆயிரம் லிட்டர் மதுபானம் சிக்கியுள்ளதாக தேர்தல் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.இதன் மதிப்பு சுமார் ரூ.87 கோடி என்று குறிப்பிட்டுள்ளது.



