திருப்பாவையில் ஐதிஹ்யங்கள்: நான்காம் பாசுரம்

ஆன்மிகக் கட்டுரைகள் சற்றுமுன் திருப்பாவை
koorathazhwan 3 - 2026

ஆழ்வானை ஒருவன் தேவ தாந்திரங்களை நீங்கள் கண்டால் பண்ணும் ஆசாரம் என் என்று கேட்க, ஆழ்வான் சாஸ்திர விரோதமாக கேளாதே கொள்ளாய் தேவதைகள் உங்களை கண்டால் பண்ணும் ஆசாரம் என் என்று கேளாய் என்றார்.

அதாவது மற்ற தேவதைகளைக் கண்டால் ஸ்ரீவைஷ்ணவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்ற கேள்வியே சாஸ்திர விரோதம். அந்த தேவதைகளை ஸ்ரீவைஷ்ணவர்கள் கண்டால் எப்படி நடந்து கொள்ளும் என்றல்லவா கேட்க வேண்டும். அதாவது தேவதாந்திரங்கள் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு கட்டுப்பட்டவர்கள் என்றபடி தேவதாந்திரங்கள்.. இதர தெய்வங்கள்

II – ஊழி முதல்வன் உருவம்போல்…
நாச்சியார் விழி விழிக்க ஒண்னாதா போலே மழைக்கால மேகங்கள் ஊழி முதல்வன் உருவம்போல் மெய் கருத்து மழை பொழிய வேண்டும் என்பது ஆழி மழைக் கண்ணா பாசுரத்தில் உள்ள சொற்கள்.

srirangan pattar - 2026

எம்பெருமானுடைய நிறத்தை கொள்ளலாமே ஒழிய அவனுடைய குணத்தை ஒருநாளும் கொள்ள முடியாது என்றபடி.
ஸ்ரீரங்கத்தில் திருஅத்தியயன உற்சவத்தில் பகல்பத்து கடைசி நாளில் நம்பெருமாளுக்கு நாச்சியார் திருக்கோலம் சாற்றுவதுண்டு. அப்போது ஸ்ரீ பட்டர் நாச்சியார் திருக்கோலம் பெருமாளுக்கு மிகவும் பொருத்தமாக இருந்தாலும் அந்தக் கருணை பொங்கும் விழி நாச்சியாருக்கு மட்டுமே ஒக்கும் என்று அருளிச் செய்த வார்த்தை இங்கு நினைக்கத்தக்கது

அதாவது எப்படி பிராட்டிக்கு காருண்யமே வடிவெடுத்த கண்கள் இருக்கும் அது எம்பெருமான் விஷயத்தில் பொருந்தா. அதுபோல் மேகம் எம்பெருமான் நிறத்தை கொள்ளலாமே தவிர குணத்தை ஒரு போதும் கொள்ள முடியாது என்றபடி

  • வானமாமலை பத்மநாபன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.