நித்தியின் சீடர்: மீண்டும் ஒரு மருத்துவர் மாயம்!

nithiyanata 3 - 2026

நித்யானந்தா சீடர் ஈரோடு பல் மருத்துவர் மாயமாகி உள்ளார்
ஈரோடு: நித்யானந்தா சீடர்கள் ஆங்காங்கே மாயமாகி வரும் நிலையில், இப்போது ஈரோடு பல் டாக்டர் ஒருத்தரையும் காணோமாம்.. மகனை காணோம் என்று வயதான தாய் கோர்ட் படிக்கட்டு ஏறியுள்ளார்!

ஈரோடு நாச்சியப்பா வீதியைச் சேர்ந்தவர்கள், பழனிச்சாமி – லட்சுமி அம்மாள்.. இவர்களது ஒரே மகன் முருகானந்தம்.. கஷ்டப்பட்டு பல் டாக்டருக்கு படிக்க வைத்தார்கள்.

மேல்படிப்பு படிக்க 2003-ல் பெங்களூரு போனார்.. எதாச்சையாக நித்யானந்தா பேசும் சொற்பொழிவை கேட்டார்.. அவ்வவுதான். ஆசிரமத்துக்கு போய்விட்டார்.. அங்கேயே தங்கிட்டார்.. அது மட்டுமில்லை.. “பிராணாசாமி” என்று தன் பெயரை மாற்றிக்கொண்டு சாமியாராகிவிட்டார்.

nithi - 2026

போன மகனை காணோமே என்று தேடியபோதுதான் பெற்றோருக்கு மகன் சாமியாராகிவிட்டது தெரிந்தது.. அதனால் 3 வருடம் போராடி.. 2006-ல் மகனை வீட்டுக்கு கூட்டிட்டு வந்தனர்.

மேட்டூரில் ஒரு டென்ட்டல் கிளினிக் ஆரம்பித்தும் தந்தனர்… ஒரு வருஷம் நல்லாதான் இருந்தார் பல் டாக்டர்.. திரும்பவும் 2007-ல் பெங்களூரு போய்விட்டார்.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

திரும்பவும் மகனை அழைத்து வர பெற்றோருக்கு தெம்பு இல்லை.. 2017-ல் முருகானந்தம் அப்பா பழனிசாமி இறந்துவிட்டார்.. அப்பா இறந்த செய்தி கேட்டதும், அன்று ஒரே ஒருநாள் மட்டும் முருகானந்தம் வந்து.. சடங்குகளை செய்துவிட்டு திரும்பவும் பிடதியில் போய் அமர்ந்து கொண்டார்.

nithi 2 - 2026

இதற்கு பிறகு லட்சுமி அம்மாளை மகனை கூட்டிவர முடியாமலேயே போய்விட்டது.. மகன் பாசம் அதிகரிக்கும்போதெல்லாம் அடிக்கடி பெங்களூரு போய் மகனை பார்த்துவிட்டு வருவார்.. ஆனால் அதற்கும் இப்போது கொஞ்ச நாளாக அனுமதி இல்லையாம்.. முருகானந்தம் ஆசிரத்தில் இல்லை என்றும் சொல்லி விட்டார்களாம்.

அதனால் அதிர்ச்சியடைந்த லட்சுமி அம்மாள், மகனைக் காணவில்லை என்று சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.. இன்னும் 4 வாரத்தில் முருகானந்தம் இருப்பிடம் குறித்து பதிலளிக்க நித்யானந்தாவுக்கும் ஈரோடு எஸ்பிக்கும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.. இப்போது ஈரோடு காவல்துறை முருகானந்தத்தை தேடி கண்டுபிடித்து வர பெங்களூருக்கு போயுள்ளது!

ஏற்கனவே தேனி டாக்டரும் இப்படித்தான் மாயமாகியதாக புகார் தரப்பட்டுள்ளது.. இப்போது ஈரோடு டாக்டரையும் காணவில்லை என்கிறார்கள்.. நிறைய பேர் கைலாசாவுக்கு படையெடுத்து வருவதாக கூறப்படும் நிலையில் இந்த டாக்டர்களும் அங்கு போய்விட்டார்களா என்ற சந்தேகம் பரவலாக எழுந்துள்ளது.

ALSO READ:  கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories