100வது நாள்… முரசொலி இட மூலப்பத்திரம் கேட்டு! கொண்டாடும் டிவிட்டர்வாசிகள்!

உரத்த சிந்தனை சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
murasoli100a - 2026

முரசொலி இடத்தின் மூலப் பத்திரம் கேட்டு 100 நாட்கள் ஆவதை முன்னிட்டு, அதனை சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர் டிவிட்டர் வாசிகள். சமூகத் தளமான டிவிட்டர் பதிவுகளில் இதற்கென, #மூலபத்திரம்100வதுநாள் என்ற ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டு, டிவிட்டரில் பதிவுகளை இட்டு வருகிறார்கள்.

சினிமா பார்க்கச் சென்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தன் அருகில் எவரையும் அமர விடாமல், தீண்டாமைக் கொடுமையைச் செய்து, அடுத்தடுத்த இருக்கைகளை காலியாக இருக்க வைத்து, பஞ்சமி நில பிரச்னையை டிவிட்டரில் பதிவிட்டார். இது பெருமளவில் அப்போது சமூகத் தளங்களில் எதிரொலித்தது. பாமக., நிறுவுனர் ராமதாஸ் இது குறித்து ஒரு டிவிட்டர் பதிவினைச் செய்தார்.

அதில், முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்ததுதான் என்று குறிப்பிட்டார். இதை அடுத்து பெரும் கருத்து மோதல்கள் நிகழ்ந்தன. திமுக., தரப்பு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு பதிவு செய்வதாகக் கூறியது. தொடர்ந்து தங்கள் கருத்துகளை இருதரப்பும் கூறி வந்த நிலையில், மத்திய தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தில் பாஜக., சார்பில் புகார் மனு அளிக்கப் பட்டது. இதை அடுத்து ஆணையத்தில் இருந்து திமுக.வுக்கு நோட்டீஸ் அனுப்பப் பட்டது. மேலும், இது குறித்து விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பியது.

ஆயினும், எதிர்க்கட்சியான திமுக,வுடன் நல்ல உறவில் இருக்கும் ஆளும் அதிமுக., தரப்பு, பஞ்சமி நில விவகாரத்தில் அமைதியாகவே இருந்து வருகிறது. ஜெயலலிதா சமாதி கடற்கரையில் அமைவதை எதிர்த்து வழக்கு தொடுத்த திமுக., தங்களது தலைவர் கருணாநிதி இறந்த போது அதே கடற்கரையில் சமாதி அமைக்க கோரியது. நீதிமன்ற வழக்கினை அதிமுக., சுட்டிக் காட்டியபோது, அந்த வழக்கை திமுக., இரவோடு இரவாக திரும்பப் பெற்றது. நீதிமன்றத்தின் கதவுகளும் அந்த நட்ட நடு இரவிலும் திமுக.,வுக்காக திறந்து வைத்து காத்திருந்தது.

murasoli100 - 2026

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் ‘அம்மா’ வழியில் ஆட்சி செய்வதாகக் கூறிக் கொண்டாலும், திமுக.,வின் நிழல் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் அதிமுக., முரசொலி மூலப் பத்திரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் திமுக.,வுக்கு ஆதரவான போக்கையே மேற்கொண்டு வருவதால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர்.

இந்நிலையில் முரசொலி மூலப்பத்திர விவகாரத்தை திசை திருப்ப பல்வேறு பிரச்னைகளை திமுக, தரப்பு ஏற்படுத்தினாலும், திமுக., எதிர்ப்பாளர்கள் அவ்வப்போது முரசொலி மூலப்பத்திரம் எங்கே என்று கேட்டு டிவிட்டர் பதிவுகளைச் செய்து வருகின்றனர்.

அது தற்போது 100வது நாளை எட்டியுள்ளது. இதன் சிறப்பு டிவிட்டர் பதிவுகளை தற்போது டிவிட்டர்வாசிகள் செய்து வருகின்றனர்

முரசொலி அலுவலக மூல பத்திரம் கேட்டு நாளையுடன் 100 நாள் ஆகப்போகிறது .
ஆகவே 100 ஆவது நாளை மிக சிறப்பாக கொண்டாடும் வகையில் ட்விட்டரில் இருக்கும் நண்பர்கள் அனைவரும் நாளை ஒருநாள் முழுவதும் ட்விட்டரில் பதிவிடும் ஒவ்வொரு பதிவின் கீழும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.