பைனான்சியர் அன்புச்செழியன் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்!

Published:

anbuchezhian residency2 - 2026

#பிகில் பட பைனான்சியர் அன்புச்செழியன் வீட்டில் கட்டுக் கட்டாக ரொக்கம் பறிமுதல்…செய்யப்பட்டுள்ளது. #ThalapathyVijay #Vijay #Bigil #ITVideo #ITRaid

சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான சென்னை மற்றும் மதுரையில் உள்ள வீடுகளில் சோதனை செய்யப்பட்டதில், ரூ.65 கோடி பணம் சிக்கியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

anbuchezhian - 2026

மதுரையைச் சேர்ந்த ‘பைனான்சியர்’ அன்புச்செழியன் சினிமா தயாரிப்பாளராகவும் இருக்கிறார். கோபுரம் பிலிம்ஸ் என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் அன்புச்செழியன், ஆண்டவன் கட்டளை, மருது, தங்கமகன் உட்பட சில படங்களை தயாரித்துள்ளார். சில படங்களுக்கு கடனுதவி அளித்துள்ளார்.

anbuchezhian residency - 2026

அன்புச்செழியன் மீது வருமான வரி ஏய்ப்பு புகார் வந்ததையடுத்து, வருமான வரித்துறை அதிகாரிகள் சென்னை தி.நகரில் உள்ள அன்புச்செழியனின் வீடு, அலுவலகம், மதுரையில் உள்ள வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடத்தினர்.

anbuchezhian1 - 2026

இரண்டாவது நாளாக இன்றும் நடந்த சோதனையில், மதுரையில் உள்ள வீடு மற்றும் அலுவலகங்களில் ரூ.15 கோடியும், சென்னையில் உள்ள வீடு மற்றும் அலுவலகங்களில் ரூ.50 கோடியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ALSO READ:  திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

Related articles

Recent articles

spot_img